அனைவருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது ஏன் தனித் தனி இடுகாடு – சுடுகாடுகள்? மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி

1 Min Read
- Advertisement -

 

மதுரை, அக். 29- அனைத்து சமூகத்தினருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது  இடுகாடு –- சுடுகாடுகள் மட்டும் ஏன் தனித்தனியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழாரியாகுளத்தைச் சேர்ந்த செல்லப்பா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: கீழாரியாகுளத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும்  இடுகாட்டுக்கு போதிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.

உயிரிழந்தவர்களின் உடல்களை தனியாருக்கு சொந்தமான ஏராளமான விவசாய நிலங்கள் வழியாகவே இடுகாட்டுக்கு  எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அறுவடை காலங்களில் பயிர்கள் சேதமடைவதாக உடல்களை எடுத்துச் செல்ல நில உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அனைத்து சமூகத்தினருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும் போது,  இடுகாடு –- சுடுகாடுகள் மட்டும் ஏன் வெவ்வேறாக உள்ளன?

தமிழ்நாட்டில் இவை பொதுவாக உள்ளதா? அல்லது ஜாதிய அடிப்படையில்  இடுகாடு –- சுடுகாடுகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *