உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததன் விளைவாக புற்றுநோய் மருந்துகள் விலை 93 விழுக்காடு வரை குறைப்பு!

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 29- புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் 543 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பில் மருந்துகளின் விலை மிகக்கடுமையாக உள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மருந்துகளை வாங்க முடியாமல் உயிர்களை தொலைத்தவர்களும் உண்டு. இந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக் கும் விதத்தில் மருந்துகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.

ஏற்ெகனவே, அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளை கட் டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை மேலும் மலிவானதாக மாற்றவும். புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் அட்டவணைப்படுத்தப்படாத 137 மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த 17-ஆம் தேதி அறிவித்தது. மேலும், உற்பத்தியாளர்கள் தங்களின் திருத்தப்பட்ட பட்டி யலை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 ‘பிராண்டு’களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை பட்டியலை மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை அடுத்த மாதம் (நவம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். திருத்தப்பட்ட விலைப்பட்டியலில், நிறுவனங்களால் 27.10.2026 வரை சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் அடங்கி உள்ளன.

ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து தற்போது ரூ.26,072.16-க்கு விற்கப்படுகிறது. 9-ந்தேதி முதல் இது ரூ.5,491-க்கு விற்கப்படும். அதே நிறுவனத்தின் டாப்ருமாப் ஊசிமருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,941-க்கு விற்கப்படும். அபோட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெவாசிசுமாப் மருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,930.13-க்கு விற்கப்படும்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் அனஸ்ட்ரோசோல் மருந்து, 10 மாத்திரைகளுக்கு தற்போது ரூ.695.76 ஆக இருக்கிறது. இது இனி ரூ.73-க்கு கிடைக்கும். டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசிமருந்து ரூ.6,337-இல் இருந்து ரூ.1,495.04 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. டசாடினிப்பின் பிராண்டான “டசானத் 20″ என்ற 60 மாத்திரை தொகுப்பின் விலை ரூ.2,812.50-இல் இருந்து ரூ.1,085.93 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இப்படி 543 மருந்துகளுக்கு திருத்தப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான திருத்தப்பட்ட விலைகளை உற்பத்தியாளர்கள் சமர்ப்பிக்கும்போது இந்த பட்டியல் புதுப்பிக்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்குறைப்பால் புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு சுமை கணிசமாக குறைந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *