மக்கள் தொகைக் கணக்கு எடுக்கிறவர்கள், இவர்கள், எந்த மதம்? அந்த மதமா? இந்த மதமா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, மதம் மாறிவிட்டவர்களா? என்றும் நினைப்பார்கள்!
மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள்,
மனதால் ஒன்றுபட்டவர்கள்!
மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள்,
மனதால் ஒன்றுபட்டவர்கள்!
வசிஷ்டபுரம், அக்.29 மக்கள் தொகைக் கணக்கு எடுக்கிறவர்கள், இவர்கள், எந்த மதம்? அந்த மதமா? இந்த மதமா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, மதம் மாறிவிட்டவர்களா? என்றும் நினைப்பார்கள். மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள். மனதால் ஒன்று பட்டவர்கள் இவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- மக்கள் தொகைக் கணக்கு எடுக்கிறவர்கள், இவர்கள், எந்த மதம்? அந்த மதமா? இந்த மதமா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, மதம் மாறிவிட்டவர்களா? என்றும் நினைப்பார்கள்! மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள், மனதால் ஒன்றுபட்டவர்கள்!
- அசோதை – இரா.அரங்கராசன் இல்ல அறிமுக விழா!
- ஒரு சுயமரியாதை அதிசயம்
- சீகூர் ஆறுமுகம்!
- 36 ஆண்டுகள் கழித்து…
- தீ மிதிக்கிறவர்களுக்கு, ஒரு பாடம் போல, சுவரெழுத்து!
- இளைய தலைமுறைத் தோழர் விக்டோரியா!
- இதுதான் பெரியார் சாதனை!
- மாவட்ட மகளிரணித் தலைவர் குணகோமதி
- மதத்துக்கு விடுதலை கொடுத்து நீண்ட நாள்கள் ஆயிற்று!
- மாணவப் பருவத்தின்போது திட்டக்குடிக்கு அடிக்கடி வந்தவன்!
- 1933 ஆம் ஆண்டிலேயே இங்கர்சாலின் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார்!
- அவ்வை நடராஜனின் இணையரின் பெயர் இங்கர்சால்!
- மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள், மனதால் ஒன்றுபட்டவர்கள்!
- தலைமை ஆசிரியராக இருந்த தர்மலிங்கம்!
அசோதை – இரா.அரங்கராசன்
இல்ல அறிமுக விழா!
இல்ல அறிமுக விழா!
கடந்த 9.9.2026 அன்று பெரம்பலூர் வட்டம் வசிஷ்டபுரத்தி்ல், கொள்கை விளக்க இல்லமாக அமைந்துள்ள அசோதை – இரா.அரங்கராசன் இல்லத்தி னைத் திறந்து வைத்து, வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
ஒரு சுயமரியாதை அதிசயம்
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடை பெறக்கூடிய இந்நிகழ்வில், இந்த வசிஷ்டபுரம் கிரா மத்தில், ஒரு சுயமரியாதை அதிசயம் நடந்திருக்கிறது. சுயமரியாதைக் கொள்கையை ஏற்றால், அந்த வாழ்வு, பல எதிர்நீச்சல்களை எல்லாம் அடித்தாலும், இறுதியில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான வாழ்க்கையாக இருக்கும் என்பதற்கு அடையாளம்தான் அரங்கராசன் – அசோதை அம்மாளின் இந்த இல்லம். அதுதான் உண்மை. பெரியார் பெருந்தொண்டர்கள் சுயமரியாதை வீரர்கள் – அய்யா அரங்கராசன் – அம்மா அசோதை அம்மாள் – இந்தக் குடும்பத்தினர் எவ்வ ளவு உறுதியானவர்கள் என்பதைப்பற்றி, இந்தக் கிராமத்திற்கு வரும்போதே நான் தோழர்களிடம் பேசிக் கொண்டு வந்தேன்.
சீகூர் ஆறுமுகம்!
பெரம்பலூர் வட்டம் என்று சொன்னபோது, முதலில் மறந்துவிட்டது. பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட எல்லைகளையொட்டி, திட்டக்குடி அருகே இருக்கிறது அகரம் சீகூர். இங்கே வரும்போது, நான் சொன்னேன், ‘‘அய்யா, இங்கே வந்தால் சீகூர் ஆறுமுகம் – சிலம்பம் சுத்துகிறார் அல்லவா, அவரை நினைக்காமல் வர முடியாது’’ என்றேன்.
அவருக்குச் சொந்தக்காரர்கள்தான், அசோதை – அரங்கராசன் இணையர். அவருடைய நெருக்கம் தான், உறவுக்காரர்கள்தான் என்று சொன்னார்கள். தி.மு.க. ஆட்சி வந்ததினால், இப்பொழுது இவ்வளவு வசதியாகச் சாலைகள் போட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு, திட்டக்குடி யிலிருந்து, ஆற்றைக் கடந்து, நடந்து வந்து, இங்கே கரையில் எங்களுக்கு வரவேற்புக் கொடுத்து, பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி, சிலம்பம் சுற்றி வரவேற்பு கொடுத்தவர்தான் சீகூர் ஆறுமுகம் அவர்கள்.
36 ஆண்டுகள் கழித்து…
இந்தக் கிராமத்தில், ஓர் அதிசயம் என்று நான் குறிப்பிட்டது என்னவென்றால், அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நிகழ்ச்சியில், இல்லத் திறப்பு விழா என்று அழைப்பிதழில் போட முடியாது. ஏனென்றால், இந்த இல்லத்தைத் திறந்து, இந்த இல்லத்திற்குக் குடி வந்து நீண்ட நாள்கள் ஆயிற்று. 1990 ஆம் ஆண்டு எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவுக்கு இதயச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். அதனால், அந்த ஆண்டு நடைபெற்ற இந்த இல்லத் திறப்பு நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியவில்லை. அதற்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் என்னால், வர முடியவில்லை. ஆனால், அன்றைக்கு நடந்திருக்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியை 36 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய அளவுக்கு ஏற்பாடுகள் செய்து சிறப்பாக இன்றைக்கு நடைபெறுகிறது. இன்றைக்கும் அவரும் மாறவில்லை; நானும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இந்தக் கொள்கையும் வளர்ந்திருக்கிறது. அய்யா இல்லை, அன்னை மணியம்மையார் இல்லை, அதோடு இந்த இயக்கம் தீர்ந்துவிடும் என்று சிலர் தப்புக் கணக்குப் போட்டார்கள். ஆனால், இன்றைக்கு இந்த இயக்கம் எப்படி செழித்து வளர்ந்து இருக்கி றது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு கல்லிலும் கொள்கையைச் சொல்லி இருக்கிறார்.
தீ மிதிக்கிறவர்களுக்கு,
ஒரு பாடம் போல, சுவரெழுத்து!
ஒரு பாடம் போல, சுவரெழுத்து!
இது ஓர் எடுத்துக்காட்டான குடும்பம். நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம் என்று சொன்னார் புரட்சிக்கவிஞர். ஆனால், இந்த நல்ல குடும்பம், கொள்கைப் பல்கலைக் கழகத்தைத் தாண்டி, ஓர் அறிவுச் சுயமரியாதைப் பல்கலைக் கழகம் போல – இந்த வீட்டுக்குள்ளே அய்ந்து நிமிடம் வந்துவிட்டுப் போனால் போதும். இந்த இயக்கம் என்னவென்று விளக்கி, அவர் எழுதி வைத்துள்ள வாசகங்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு கேள்வியும் சம்மட்டி அடிக் கேள்வி. சிந்திக்கக்கூடிய கேள்விகள் – சாதாரணமானவையல்ல. மரக்கட்டைகளை எரித்து, தீ மிதிப்பவர்கள், வரகு உரியை எரித்து, அதனைச் சாம்ப லாக்கி, அதன்மீது நடந்து காட்டுவார்களா? என்று தீ மிதிக்கிறவர்களுக்கு, ஒரு கேள்வி, ஒரு பாடம்.
இளைய தலைமுறைத் தோழர் விக்டோரியா!
யாராலும், பதில் சொல்ல முடியாது. சுயமரியாதை இயக்கம் என்பது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த இல்ல அறிமுக விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடியவர் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராஜ் அவர்கள், வரவேற்புரை ஆற்றியவரோ நம்முடைய இளைய தலைமுறை – இந்த இளைய தலைமுறைக்காக நிறைய பேர் அதிகம் பாடுபடுகிறார்கள். இதுவரையில் எல்லாம் இளைய தலைமுறையைச் சரியாக கவனிக்கவில்லை. இளைஞர்கள் நம்மோடு இருந்தாலும், நாம் இளை ஞரணி என்கின்ற அளவில் ஒரு கட்டுக்குள் வைத்தோம். இப்பொழுது திடீரென்று தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஓர் அரசியல் சுனாமியினால், வயதானவர்கள் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள்; நாங்கள் முன்னால் வருகிறோம் என்று, வயதானவர்களே இளைஞர்களைத் தேடிக்கொண்டு வரக்கூடிய அளவுக்கு – வந்திருக்கக்கூடிய அந்த இளைய தலை முறைத் தோழர்தான் விக்டோரியா. அவர்தான் இங்கே வரவேற்புரை ஆற்றினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பெயர் வைப்பதிலேயே ஒரு புரட்சி செய்த இயக்கம், சுய மரியாதை இயக்கம்தான். நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அரசு வழக்குரைஞர் எனது அருமை நண்பர் இந்திரா கருணாநிதி அவர்களே அதற்குச் சான்றாகும்.
இதுதான் பெரியார் சாதனை!
கருணாநிதி அவர்கள் மிகப்பெரிய அளவுக்கு அந்த வாய்ப்புப் பெற்றவர்கள். அவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் முன்னால் இருக்கவேண்டும். இந்தக் குடும்பத்தில் இருந்து, இந்தக் கிராமத்திலிருந்து, யாருக்குப் படிக்கத் தகுதி இல்லை என்று யாரைச் சொன்னார்களோ, இவர்கள் எல்லாம் படிக்கக் கூடாதவர்கள் என்று யாரைச் சொன்னார்களோ, அவர்கள் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்களே, இதுதான் பெரியார் சாதனை! பெரியார் என்ன செய்தார்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? திராவிடத்தால் வாழ்ந்தோமா, வீழ்ந்தோமா? என்றால், வாழ்ந்தோம் என்பதற்குத்தான் இந்திரா அம்மையார் அவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
மாவட்ட மகளிரணித் தலைவர் குணகோமதி
ஒவ்வொரு கல்லும், இந்தக் கொள்கையைப் பேசு கிறது; ஒவ்வொரு சுவரும் இந்தக் கொள்கையைப் பேசுகிறது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டக் காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மாநில ஒருங்கிணைப்பாளர் நம்முடைய தோழர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்கள், மாவட்ட மகளிரணித் தலைவர் குணகோமதி அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி, சுயமரியாதை வீரர் புலவர் வை.நாத்திக நம்பி, நன்றி உரை கூற இருக்கக்கூடிய அரங்க. இங்கர்சால். இப்படிப் பெயர் வைப்பதில்கூட புரட்சி இந்தக் குடும்பத்தில்.
மதத்துக்கு விடுதலை கொடுத்து
நீண்ட நாள்கள் ஆயிற்று!
நீண்ட நாள்கள் ஆயிற்று!
இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வருகிறார்கள், அப்பொழுது, அரங்கராசன் என்பார்கள்; அடுத்தபடியாக, இங்கர்சால் என்றவுடன், ‘‘சார், எந்த மதம்?’’ என்று கேட்பார்கள். மதத்துக்கு விடுதலை கொடுத்து, நீண்ட நாள்கள் ஆயிற்று, எங்களுக்கு என்று சொல்லக்கூடிய ஓர் அமைதிப் புரட்சி. இத்தனைக்கும் எனக்கு எல்லா குடும்பத்தவர்களிடம் ஒரு நெருக்கம் உண்டு – திட்டக்குடி மற்ற பகுதிகளில். ஆனால், இந்தக் குடும்பம் எனக்கு அவ்வளவாக நினைவு இல்லை. ஆனால், அவர் ஒரே விடாப்பிடியாக இருந்தார். எனக்கு உடல்நலக் குறைவு. அப்பொழுது மட்டுமல்ல, அண்மையில் கூட, எனக்கு உடல்நலத் தொந்தரவு இருக்கிறது.ஒரு பக்கம் தொண்டை வலி, இன்னொரு பக்கம் காதுவலி. இப்படி பல தொல்லைகள். அதெல்லாம் இருந்தாலும், எப்படியும் அவருக்குத் தேதி கொடுக்க வேண்டும் என்று நினைத்து, இங்கே வந்தேன். அவர், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ச்சியை வைத்து, பெரிய அளவில் விருந்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த ஒரு நாள்தான் இடையில் நெருக்கிப் பிடித்தோம்.
அதனால், இப்பொழுது பார்த்தீர்கள் என்றால், எல்லோரும் ‘‘குளுகுளு’’ என்று அதில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். கொளுத்தும் வெயில், அதைப்பற்றி கவலையில்லை.
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.’’ (குறள் 1028)
மாணவப் பருவத்தின்போது
திட்டக்குடிக்கு அடிக்கடி வந்தவன்!
திட்டக்குடிக்கு அடிக்கடி வந்தவன்!
நமக்குக் கொளுத்தும் வெயிலானாலும் வேலை உண்டு. அதே மாதிரி எவ்வளவுக் குளி ரானாலும் வேலை உண்டு. அந்த வகையில், இந்தக் குடும்பத்தினர் செய்திருப்பது அமைதிப் புரட்சி. இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உரு வாக்கப்பட்ட பணிகளால், இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் திட்டக்குடி வருவதென்றால், மிகப்பெரிய அளவில் சிரமம் இருக்கும். விருத்தாசலம் வந்து, பிறகு திட்டக்குடி வருவோம். நான் மாணவப் பருவத்தின்போது திட்டக்குடிக்கு அடிக்கடி வந்தவன். தோழர்கள் எல்லாம் இங்கே இருக்கின்றார்கள். அதிலும் அய்யா சீகூர் ஆறுமுகம் அவர்கள், இந்தப் பகுதிக்கு நாங்கள் வந்தால், அவருடைய குழுவினரோடு சிலம்பம் ஆடுவதற்கு வந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட அவரால் உருவான அரங்கராசன். அதைவிடத் தெளிவாக அசோதை அம்மாள். இவருடைய குடும்ப உறுப்பினர்களை நினைத்துப் பாருங்கள். மகன் இங்கர்சால்.
ஒரு வேடிக்கையான செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
தத்துவ மேதை இங்கர்சாலின் பிறந்த நாடான அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்தேன். அங்கே இங்கர்சாலின் பெயரைக் கொண்ட அவருடைய கொள்ளுப் பேரனின் பேரனான ஒருவர் இருந்தார். அதாவது, அய்ந்து அல்லது ஆறு தலைமுறைகளைக் கடந்த ஒருவர். அங்கு அவர் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார்.
அந்த ஊரில் ஒரு வழக்குரைஞர்கள் சங்கம் இருக்கிறது. அங்கே சென்றபோது, “இந்த ஊரில் இங்கர்சால் என்ற பெயர் கொண்டவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
1933 ஆம் ஆண்டிலேயே இங்கர்சாலின் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார்!
ஆனால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், 1933 ஆம் ஆண்டிலேயே இங்கர்சாலின் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு இங்கர்சால் என்று பெயர் வைத்தார்கள். அந்த அளவுக்கு இங்கர்சால் என்ற பெயர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தோம் என்றால், ஆண்களுக்கு மட்டும்தான் இங்கர்சால் என்று பெயர் வைப்பார்கள் என்று. அந்த எண்ணத்தையும் உடைத்தெ றிந்தவர் அவ்வை நடராஜன்.
அவ்வை நடராஜனின் இணையரின் பெயர் இங்கர்சால்!
அவ்வை நடராஜன் ஒரு சிறந்த தமிழ்ப் பேராசிரியர். அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். அவருடைய துணைவியாரும் புகழ்பெற்ற மருத்துவர்; மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். இருவரும் இப்போது வரலாறாகிவிட்டார்கள்.
அந்த அம்மையாருக்கு அவருடைய தந்தையார் வைத்தப் பெயர் என்ன தெரியுமா? இங்கர்சால்!
ஒரு பெண்ணுக்கு இங்கர்சால் என்று பெயர் வைத்தி ருக்கிறார்கள். இதில் என்ன வித்தியாசம்? ஆணுக்கு ஒரு பெயர், பெண்ணுக்கு ஒரு பெயர் என்று ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்?
மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள், மனதால் ஒன்றுபட்டவர்கள்!
ஆகவே, இங்கர்சால், மருமகள் ஆனந்தி, பெயர்த்தி விக்டோரியா, எலிசபெத், சர்வ உலகத்தையே இந்த வீட்டுக்குள்ளே வைக்கோல் பிரிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அதாவது, மக்கள் தொகைக் கணக்கு எடுக்கிறவர்கள், இவர்கள், எந்த மதம்? அந்த மதமா? இந்த மதமா? என்று மிரண்டு போகக்கூடிய அளவிற்கு, மதம் மாறிவிட்டவர்களா? என்றும் நினைப்பார்கள். மதம் மாறவில்லை; மதமே இல்லாதவர்கள். மனதால் ஒன்றுபட்டவர்கள் இவர்கள். அதோடு இன்னும் விட்டுப் போனதை எழுதி வைத்திருக்கிறார்கள். மகள் பெயர் வாலன்டினா – அதே மாதிரி மகன் பெயர் ரஷ்யா. உலகமே இங்கே இருக்கிறது. ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்பதற்கு இக்குடும்பமே ஓர் எடுத்துக்காட்டு.
தலைமை ஆசிரியராக இருந்த தர்மலிங்கம்!
ஒரு கொள்கையாளர், உறுதியாக இருந்ததால்தான் 36 ஆண்டுகள் கழித்து இந்த இல்லத்தினை அறி முகப்படுத்துகிறார். நானும் தொடர்ந்து, முயற்சி செய்தேன், இங்கே வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இன்றைக்கு வரக்கூடிய அந்த வாய்ப்பு வந்தது. இப்பொழுது என்ன நிலை தெரியுமா? காலையில் ஒரு கட்சியில் இருந்தவர் மாலையில், அந்தக் கட்சியில் இருக்கிறாரா? என்பது சந்தேகம்தான். அப்படிப்பட்ட நிலை இன்றைக்கு இருக்கிறது. இன்றைக்கு எனக்கு 93 வயது என்று சொல்கிறார்கள், அவ்வளவுதான். நான் அதை நினைப்பது இல்லை. நம்முடைய தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களுக்கு 82 வயதாகிறது. தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். கீழப்பெரம்பலூரைச் சார்ந்தவர், அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அவரெல்லாம் நீண்ட காலம் வாழ வேண்டும். கருஞ்சட்டையை அணிந்துகொண்டு, ஓர் எளிய விவசாயி மாதிரி இன்றைக்கு இருக்கிறார் என்றால், நன்றி உணர்ச்சியினால்தான். பெரியார் இல்லை என்றால், நமக்கு இந்த மான வாழ்வு, அறிவு வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு கிடைத்திருக்காது. அதனால்தான், கடவுள் பாட்டு எழுதியிருக்கார். ‘‘கடவுள் இல்லடா, மதம் இல்லடா, ஜாதியே இல்லடா’’ என்பது போன்று எழுதுகிறார். இந்தப் புரட்சி இருக்கிறது, பாருங்கள், தீ பரவட்டும்! என்று, எங்கே பார்த்தாலும் அய்யா அவர்கள் உருவாக்கிய அந்த மாற்றம். அது மட்டுமல்ல, ஒரே ஒரு சுயமரியாதைக்காரர் இருந்தால், அந்த ஊரே மிகப்பெரிய அளவுக்குச் சிறப்பாக இருக்கும். ஒரே ஒரு மருத்துவமனை இருந்தால், எல்லா நோயும் தீரும்; ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தால், எல்லோருக்கும் படிப்பு கிடைக்கும். ஒரே ஒரு தீயணைப்பு நிலையம் இருந்தால், எங்கே தீ பிடித்தாலும், அதை அணைப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். அது மாதிரி, ஒரே ஓர் அரங்கராசன் இருந்தால், அதுவும், அரங்கராசன் அவர்கள் 82 வயது இளைஞர், அவ்வளவுதான். அது ஒன்றும் பெரிய வயதில்லை. 93 வயதில், அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருக்கும்போது, இவருக்கு 82 வயதுதானே, இளைஞர்தானே!
(தொடரும்)
