தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – கழகக் குடும்பங்களின் சங்கமம்!

8 Min Read
- Advertisement -

திராவிடர் கழகம்

தருமபுரி, அக்.28 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா –  கழகக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழுவில் வைக்கப்பட்ட  தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தருமபுரி மாவட்டக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா –  கழகக் குடும்பங்களின் சங்கம விழா – பழைய தருமபுரியில் மாவட்டத் துணைச் செயலாளர்  பெ.கோவிந்தராஜ்-லட்சுமியின் இல்லத்தில் கடந்த 4.10.2026 அன்று காலை 11 மணிக்குத் தொடங்கப்பட்டு, குதூ கலத்தோடும், கொண்டாட்டத்தோடும் நடைபெற்றது.

குடும்ப விழாவிற்கு  மாவட்டக் கழகத் தலைவர்  பீம. தமிழ்பிரபாகரன்தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா. முனியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

பழைய தருமபுரி வாழ் பொது மக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத் துணைச் செயலாளர் பெ. கோவிந்தராஜ், அந்தப் பகுதியில் இல்லம் தோறும் சென்று, குடும்ப விழாவிற்கு அழைப்பு விடுத்ததின் அடிப்படையில் மக்கள்  அதிக அளவில் கலந்து கொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்வு

குடும்ப விழாவில் மிகச்சிறந்த ஓர் இணைப்பு நிகழ்வாக பெ.கோவிந்தராஜ் இல்லம் முன்பாக திராவிடர் கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

தந்தை பெரியார் எப்படி அனைவருக்குமான தலைவரோ, அதற்கு சான்றாதாரமாக கொடியேற்றும் நிகழ்வில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பொறுப்பா ளர்களும் கலந்து கொண்டது மிகவும் சிறப்புடையதாக அமைந்தது. அனைத்துக் கட்சி தோழர்கள் இணைந்து நிற்க,  மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தந்தை பெரியார் வாழ்க!

அன்னை மணியம்மையார் வாழ்க!

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் வாழ்க!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க !

பேரறிஞர் அண்ணா வாழ்க!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க!

தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி வாழ்க!

முத்துவேல் ஸ்டாலின் கருணாநிதி வாழ்க!

என்ற முழக்கங்களோடு கொடியேற்றப்பட்டது.

படத்திறப்பு நிகழ்வு!     

குடும்ப விழாவின்  மாபெரும் சிறப்புக்குரிய  நிகழ்ச்சியாக படத்திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஜி.சம்பத், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.சபரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டி.ஜி.சம்பத், ‘விடுதலை’ சிறப்பு மலரைப் பெற்றுக் கொண்டார்.

படத்திறப்பு நிகழ்வில், தந்தை பெரியார் படத்தினை மருத்துவர் பி.கே.ஆர்.கவுதமன்,

அன்னை மணியம்மையார் படத்தினை ஆசிரியர் டி.பி.பழனியப்பன்,

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் படத்தினை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி,

அறிஞர் அண்ணா அவர்களின் படத்தினை திரா விட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்,

எம்.ஜி.ஆர். படத்தினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பி.ராமன்,

பச்சைத் தமிழர் காமராஜர் படத்தினை பொறியாளர் கேசவன் ஆகியோரும் திறந்து வைத்தனர்.

படங்களைத் திறந்து வைத்து, அந்தந்தத் தலை வர்களைப் பற்றி

சிறப்பாக உரையாற்றினர்.

நமக்காகப் பாடுபட்டத் தலைவர்களை நினைவு கூரும் நிகழ்வாக இந்தப்

படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் பிஞ்சுகள் மற்றும் மாணவர்களுக்கான
கலை நிகழ்ச்சிகள் போட்டிகள்!

குடும்ப விழாவில் பெரியார் பிஞ்சுகள் மற்றும் மாணவர்கள் 2 நிமிட குறு நாடகங்களை நடித்துக் காட்டினர்.

குறு நாடகங்களுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தும்,  பெரியார் பிஞ்சுகளுக்கான  அனைத்துப் போட்டி நிகழ்ச்சிகளையும் மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நடத்தினார்.

‘‘பிரம்மாவும் வேண்டாம் அவர் படைத்த ஜாதியும் வேண்டாம்!’’

‘‘உங்க ரத்தம் என்ன குரூப்!’’

‘‘எங்க மாட்டைக் கொஞ்சம் மேயுங்க!’’

என்ற தலைப்பில் மூன்று நாடகங்கள் நடித்துக்காட்டப்பட்டன.

சார்லஸ் டார்வினின்  “உயிர்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி” என்னும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாக உலகத்தில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு படைப்பு தத்துவக் கதை – கற்பனையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவைத் தவிர அந்தக் கதைகளில் எல்லாம் எந்தவிதமான பிறவி பேதமும் கற்பிக்கப்படவில்லை.

ஆனால், இந்து மதத்தில் மட்டும் தான் பிரம்மாவின் நான்கு உடல் பாகங்களில் இருந்து மனிதர்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள். நான்கு முகங்கள் கொண்ட பிரம்மா ஒவ்வொரு முகத்திலும் ஒரு ஜாதியை படைத்திருக்கவில்லை.

இந்தப் பிறவி பேதக் கருத்தைத் தான் தந்தை பெரியார் அவர்களும், பாபா சாகேப் அவர்களும் கேள்விக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கருத்தின் அடிப்படையில் தான் ‘‘பிரம்மாவும் வேண்டாம், ஜாதியும் வேண்டாம்’’ என்ற நாடகம் நடித்துக்காட்டப்பட்டது.

பசுவைத் தெய்வமாகப் பார்க்கச் சொல்லும் பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலும் பசுவைப் பரா மரித்ததோ அல்லது பாதுகாத்ததோ கிடையாது என்ப தைச் சொல்லும் விதமாக, ‘‘எங்க மாட்டை கொஞ்சம் மேயுங்க’’ என்ற நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஜாதியைத் தெரிந்து கொள்வதைக் காட்டிலும், ரத்த குரூப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘‘உங்க இரத்தம் என்ன குரூப்?’’ என்ற நாடகம் நடத்தப்பட்டது.

நினைவாற்றல் திறன் போட்டிகள்!

25 வெவ்வேறு விதமான பொருள்கள் மேஜையில் பரப்பி வைக்கப்பட்டு, அதனை மாணவர்கள் 20 நிமிடங்கள் பார்த்து, நினைவில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாணவர்கள், அவர்கள் பார்த்த பொருட்களை ஒரு தாளில் எழுதி வர வேண்டும். அதிக பொருள்களின் பெயர்களை எழுதிய முதல் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல ஒரு படக்காட்சி மாணவர்களிடம் வழங்கப்பட்டு, அதில் உள்ளவற்றை நினைவில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, படக்காட்சியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதிகக் கேள்விகளுக்கு விடை அளித்த குழு வெற்றி பெற்ற குழுவாக அறிவிக்கப்பட்டது.

போட்டிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெரியார் பிஞ்சுகள்

கோ.பகுத்தறிவு, கோ.தமிழினி, த.பவித்ரன், த.மெய்ந்தமிழ், இனியன், விமலேஷ், பிரணவ், சஞ்சனா, லித்திகா, சசிதரன், பாரிவேந்தன், அ.பிரதீஷ், ச.அரிஅரன், அ.பவன் மித்ரன்

குறளுக்கு, குறள் போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

பெரியார் பிஞ்சுகள் மற்றும் மாணவர்களுக்கான இந்தப் போட்டியை, மாநில  மாணவர் கழகத் துணை செயலாளர் ச. மணிமொழியும், கோ.பகுத்தறிவும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

கலந்து கொண்ட அத்தனை பெரியார் பிஞ்சு களுக்கும், மாணவர்களுக்கும் மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ரூ.1500 மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார்.

‘‘மந்திரமா, தந்திரமா?’’ நிகழ்ச்சி!

ஊத்தங்கரை கழக கிளைச் செயலாளர் சிவராஜ் ‘மந்திரமா, தந்திரமா?’ நிகழ்ச்சியை சிறப்பாக நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி அந்தப் பகுதியில் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

வழ்த்துரை வழங்கியோர்!

பழைய தருமபுரி பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள், அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் நிகழ்வில் வாழ்த்தி உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய அத்தனைத் தோழர்களும், சமீப கால தமிழ்நாட்டின் அரசியலைக் குறித்து தங்களுடைய மிகுந்த வருத்தத்தைத் தெரி வித்தனர்.

ஒரு மாபெரும் மக்களாட்சியைத் தந்து கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, எதற்குமே உதவாத ஒரு சினிமா கவர்ச்சியால்  வீழ்த்தப்பட்டுள்ளது என்றும்,

தமிழ்நாட்டின் வரலாறு கெட்ட வாய்ப்பாக பின்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது என்றும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

திராவிடர் கழகமும், அதன் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, இன்று வரையிலும்  ஒரு தோன்றாத் துணையாக விளங்குவதையும் பாராட்டினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், திராவிடர் கழகம் அழைத்திருக்கிறது என்ற அடிப்ப டையில், ஜாதிய எல்லைகளைக் கடந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களையும், சிறப்பு அழைப்பாளர்களையும் பாராட்டினார். நிகழ்வினை சிறப்பாக நடத்திய பெ.கோவிந்தராஜூவிற்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் தன்னுடைய பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

மாவட்டத் தலைவர் பீம. தமிழ் பிரபாகரனையும், மாவட்டச் செயலாளர் மா.முனியப்பனையும் களப்பணிக்காகப் பாராட்டினார்.

நினைவில் வாழும் ஆர்.சின்னசாமி, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரான அவருடைய  சகோதரர், திராவிட இயக்க அடையாளமாக அந்தப் பகுதியில் திகழ்ந்த கோவிந்தசாமி,  அவருடைய மகன்கள் தான் ஜி.வீரமணி, ஜி.சம்பத். மேனாள் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் என்பதனை மாநில ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மருத்துவர்
பி.கே.ஆர். கவுதமன் சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்.

தான் பிறந்த கிராமப்புற சூழ்நிலையையும், ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்த, தான் தந்தை பெரியார் அவர்கள் வாங்கித் தந்த இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற வரலாற்றையும், விழாவுக்கு வந்திருந்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்து ரைத்தார்.

இன்றைய இளைய தலைமுறை, நமக்காகப் பாடு பட்டத் தலைவர்களின் வரலாறுகளையும் நம்முடைய பெற்றோர் நமக்காகப் பட்டத் துன்பங்களையும் மறக்கக்கூடாது. சினிமா கவர்ச்சியில் தங்களை இழந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையும் இளைஞர்களுக்கு விடப்பட்டது.

கலந்து கொண்டு சிறப்பித்த பழைய தருமபுரி வாழ் பொது மக்கள்: முனிராஜ், எஸ்.ராமன்,
ஆர்.குமார், ஜி.பெரியசாமி, சி.டில்லி, பி.கண்ணன், எம்.முரளி, வீரமணி, கோவிந்தராஜ், முருகன், கன்னிப்பட்டி, மூர்த்தி, டி.வினோத், சி.ராமசாமி,
ஆர்.சின்னசாமி, வி.நடராஜ், தண்டபாணி, சக்திவேல், முருகன், மூர்த்தி, மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தி, ராஜி, சன்னாசி, பட்டாபிராமன், கே.செட்டி,
எம்.வேலு, ஏ.சக்தி, விஷால், சேகர், முனியப்பன், ப.ரமேஷ், சி.அருண்குமார், சி.அசோக், வெ.நித்திஷ், ஆ.கலாநிதி, வெ.கார்த்திகேயன், கு.சந்தோஷ்குமார், வ.துரை, ஆ.சக்தி, வஜ்ஜிரம், ஜீவா, ஆட்டோ வேலு, ந.வெங்கடேஷ், பா.கோவிந்தராஜ், குட்டி.

குடும்ப விழாவிற்கு விருந்து உணவைத் தயாரித்த வர்கள்: இளவரசன் ஓட்டல் உரிமையாளர் போத்தராஜன் மற்றும் தோழர்கள்.

ஒலி ஒளி மற்றும் மேடை வடிவமைப்பு செய்த வர்கள் இந்து ஆடியோஸ் நஞ்சப்பன் மற்றும் தோழர்கள்.

உரையாற்றிய கழகத் தோழர்கள்

பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் மத்தூர் இந்திரா காந்தி, மாநில கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு.

பங்கேற்றோர்!

சேலம் மாவட்டச் செயலாளர் எம்.பி.சரவணன், மாவட்ட துணை தலைவர் LIC மு.பரமசிவம், கமலாபுரம் தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் கு.சரவணன், சி.ராமசாமி, முருகன், இரா.முத்தமிழ், பெ.மாணிக்கம், ராஜா, எஸ்.லட்சுமி, நா.சிலம்பரசன்.

லட்சுமி கோவிந்தராஜ், பி.கே.ஆர்.மலர்விழி, பொதுக்குழு உறுப்பினர் அ.சங்கீதா, பெ.சகுந்தலா, அ.கயல்விழி, எஸ்.சரிதா, எம்.இளவரசி, வி.நந்தினி, வி.கங்கா, லட்சுமி, பழனியம்மாள், மகேஸ்வரி, லட்சுமி, மங்கம்மாள், பெ. கல்பனா, சசி, மீனாட்சி, சத்யா.

குடும்ப விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் சுவையான அசைவ பிரியாணி உணவு வழங்கப்பட்டது..

குடும்ப விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெ.கோவிந்தராஜ்– லட்சுமி குடும்பத்தார் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு, விழா இனிதே நிறைவடைந்தது.

தொகுப்பு: பீம.தமிழ்ப்பிரபாகரன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *