ஆந்திராவில் ‘அர்னாப் புயலால்’ சூறாவளிக் காற்றுடன் கனமழை!

- Advertisement -

தமிழ்நாடு

விசாகப்பட்டினம், அக். 28- ஆந்திராவில் ‘அர்னாப்’ புயலால் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அர்னாப் புயலாக மாறியது.

இந்த புயல் 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்ப தால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா, கோதாவரி மாவட்டங்களில் நேற்றிரவு (27.10.2026) பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் விசாகப்பட்டினத்தில் 20 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுப்பின. நள்ளிரவு 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே யானம் அருகே அர்னாப் புயல் கரையை கடக்கும் என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125-135 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் பல இடங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அர்னாப் புயல் காரணமாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்து நேற்று மாலை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சி யர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு மாவட்டங் களில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மய்யங்களில் சுமார் 85 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *