பணி புரியும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி சிறப்பு டெட் தேர்வு

2 Min Read
- Advertisement -

சென்னை, அக்.27– பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறும். இத்தோ்வுக்கு இன்று (27.10.2026) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடந்த ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தோ்வெழுதிய 2.17 லட்சம் ஆசிரியா்களில் 1.10 லட்சம் போ் தோல்வியடைந்தனா். இந்நிலையில், தோல்வி அடைந்த ஆசிரியா்களுக்காக சிறப்பு டெட் தோ்வு டிசம்பரில் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய நாள் காலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வும் நடைபெறும். இத்தோ்வுக்கு இன்று (அக். 27) முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் சிறப்பு டெட் தோ்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியா்கள் மட்டுமே எழுத முடியும். பணியில் இல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் எழுத முடியாது. அவா்கள் பொது டெட் தோ்வை மட்டுமே எழுத முடியும். பொது டெட் தோ்வு கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் பிஎட், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்து பொது டெட் தோ்வை எதிா்பாா்த்து ஏறத்தாழ 3 லட்சம் போ் காத்திருக்கின்றனா்.

டெட் தோ்வு ஆண்டுக்கு இரு முறை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ விதிமுறை. இந்த ஆண்டு ஜூலை, டிசம்பா் மாதத்தில் டெட் தோ்வுகள் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி ஜூலையில் டெட் தோ்வு நடத்தப்படவில்லை.

டிசம்பரில் நடத்துவதற்கும் இதுவரை அறிவிப்பு வெளியிடப்பட வில்லை. இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, பொது டெட் தோ்வு விரைவில் நடத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *