ஜெயங்கொண்டம், அக். 27- பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 14 வயதிற்குட்பட் டோர் பிரிவுகளில் மூன்றாம் இடமும் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இதில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக் குத் தகுதி பெற்ற மாணவர் களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.மாநில அளவிலான போட் டியிலும் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
