சென்னை அக். 27- ‘அரசியல் காழ்ப்பு ணர்ச்சியோடு அன்பில் மகேஷ் கைது செய்துள்ளார்கள். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் தவெக அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசி யல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியைக் கைது செய்துள்ள தவெக அரசுக்குக் கடும் கண்டனம்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேைஷ கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதே சமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது’ எனத் தெரிவித்துள்ளார்.
