
“ஏ… யப்பா… அலாரம் அடிச்ச சத்தம் கேட்டுச்சா?” என்று கேட்டார் பர்வதம்மா.
“கேட்டுச்சாவா? அதுதான் எல்லார் செல் போனும் அலறுச்சே! கன மழை பெய்ய வாய்ப் பிருக்கு. எச்சரிக்கையா இருங்கன்னு… ஒரே நேரத்தில் அவ்ளோ பேருக்கும், அலர்ட் மெசேஜ் அனுப்பினாங்களே அரசாங்கத்துல இருந்து!” என்றார் கூலாக செல்லத்தாயி!
“ஆனா, மழை தான் வரலயே! நான் அந்த அலாரத்தைச் சொல்லல… தலைமைச் செயலகத்தில 5 நிமிசத்துக்கு விடாம அடிச்ச அலாரத்தைச் சொன்னேன்.”
“தலைமைச் செயலகத்திலயா?” ஆச்சரிய மாயிற்று செல்லத்தாயிக்கு!
“ஆமா… இன்னிக்கு லீவுங்கிறதால, போன வெள்ளிக் கிழமையே அரசு அலுவலகங்கள்ல எல்லாம் ஆயுத பூஜை கொண்டாடினாங்களாம்…” தகவலைச் சொன்னார் பர்வதம்மா.
“கவர்மெண்ட் ஆபீஸ்லல்லாம் கொண்டாட லாமா? அது எல்லாருக்கும் பொதுவான இடமாச்சே!”
“உனக்குத் தெரியுது. நம்ம அரசுக்கு எங்க தெரியுது?”
“இப்படி ஆளாளுக்கு அவங்கவங்க மத நிகழ்ச்சியை அரசு அலுவலகத்தில கொண்டாட ஆரம்பிச்சா என்னாகிறது? ஆளாளுக்கு நாட்டா மையா?” கோபம் ஏற ஆரம்பித்தது செல்லத்தாயிக்கு!
“இதையெல்லாம் ஒழுங்கா கண்காணிக்க வேண்டிய தலைமைச் செயலகத்திலேயே ஒரு மதத்தோட பண்டிகையைக் கொண்டாடுறாங்கன்னா வெளங்குமா? சரி, செய்தியைப் படிக்கிறேன் கேளு…
“சென்னை தலைமைச் செயலத்தில் உள்ள ஆவண பிரிவில் ஊழியர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். அப்போது பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். கற்பூரப் புகையால், தீ பற்றினால் அடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இந்த சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.”
“ஆவணப் பிரிவிலயா? அட, அறிவுக் கொழுந்துகளா? அது எவ்வளவு முக்கியமான பகுதி! தமிழ்நாட்டோட முக்கியமான அரசு ஆவணங்கள் பாதுகாக்கப்படுற பிரிவில கொஞ்சம் கூட எச்சரிக்கை உணர்வு இல்லாமல் தீயைக் கொண்டு போறோமேன்னு கூடவா இவங்களுக்குத் தோணாது?” கொதித்துப் போனாள் செல்லத் தாயி.
“பக்தி வந்தால் தான் புத்தி போயிடுமே!” சலித்துக் கொண்டார் பர்வதம்மா.
“இது பக்தி சம்மந்தமான பிரச்சினையில்ல… தமிழ்நாட்டின் அரசு ஆவணங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. தங்கள் பொறுப்பிலிருந்து விலகி, அலட்சியமா நடந்துக்கிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மேல உரிய நடவடிக்கை எடுக்கணும்!” உரிமைக் குரல் எழுந்தது செல்லத்தாயிடமிருந்து.
“ உன் கோபம் நியாயமானதுதான். புகை வந்தால், தீப் பிடிக்கிறதுக்கான ஆபத்து இருக்குன்னு, அந்தக் கருவிக்குத் தெரிஞ்சிருக்கு. இந்த ‘அறிவாளி’ களுக்குத் தெரியலையே! பல இடங்களில இப்படி தீபாவளி, ஆயுதபூஜை, கார்த்திகை தீபம்னு விபத்துகள் நடந்திருக்கிறது தெரியாதா யாருக்கும்?” பற்றிக் கொண்டது பர்வதம்மாவுக்கும்!
“ஆனால் அதுக்குப் பொறுப்பான அதிகாரிகளும், அரசுல இருக்கிற ஆட்சியாளர்களும் என்ன நட வடிக்கை எடுக்கப் போறாங்கன்னு தெரியலையே!”
“இது கேள்விக்கு உட்படுத்தப்படணும். மதத்தின் பெயரால், நம்பிக்கையின் பெயரால், இந்தியாவின் மதச் சார்பின்மைக்கும் ஆபத்து, அரசின் ஆவணங்களுக்கும், அலுவலகத்துக்கும் ஆபத்துன்னா என்ன அர்த்தம்?”
பர்வதம்மா, செல்லத்தாயி மட்டுமல்ல… குடிமக்கள் எல்லோருக்கும் இந்தக் கேள்வி உண்டு.
அலட்சியமாக நடந்துகொண்டு ஆபத்தை விளைவிக்க முயன்றவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
