இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அதாவது எஸ்.அய்.ஆர். நடவடிக்கையின் போது 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்!!
பக்தியின் யோக்கியதை
‘‘நவராத்திரி விழாவின் போது சினிமாப் பாடல் களை பாடி ஆபாச நடனம் ஆடுவதா? சட்டப்படி தண்டனை தர வேண்டும்’’ என்று உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு!
இது நாகரிகம் அல்ல!
‘‘கோவை காந்திபுரம் நஞ்சப்ப சாலையில் ரூபாய் 301.71 கோடி செலவில் திமுக ஆட்சியில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற நூலகம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டது. அதனை இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் 16.10.2026 அன்று திறந்து வைத்தார். அது வரவேற்கத்தக்கதே!
பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் உள்ள பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள ‘நான் முதல்வன்’ என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் என்பது அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நினைவுட்டுவதாக இருப்பதாகக் கருதி அந்தப் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமான செயலல்ல’’ என்ற சர்ச்சை கிளம்பி உள்ளது.
