தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 3.85 லட்சம் கோரிக்கைகள் நிலுவை!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி அக். 16-  தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 21 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், நாடு முழுதும் உள்ள தகவல் ஆணையங்களில் கடந்த ஜூன் 30 வரையிலான காலத்தில் 3.85 லட்சம் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்து  21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் தன்னார்வ அமைப்பான சதார்க் நாக்ரிக் சங்கதன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும் உள்ள 28 தகவல் கமிஷன்களில் கடந்த ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் 3.85 லட்சம் கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. இதில் 9 கமிஷன்களில் 37,701 கோரிக்கைகள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய தகவல் கமிஷன் 14,603 கோரிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது. மகாராட்டிர மாநில கமிஷன் 14,140 கோரிக்கைகளை திருப்பி அனுப்பி இரண்டாம் இடத்தில் உள்ளது. பீகாரில் 4,417 கோரிக்கைகளும், குஜராத்தில் 3,276 கோரிக்கைகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அய்ந்து மாநிலங்கள் எத்தனை கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை திருப்பி அனுப்பியுள்ளன என்ற தரவுகளை வழங்கவில்லை. பதினான்கு தகவல் கமிஷன்கள், கோரிக்கைகள், மேல்முறையீடுகளுக்கு தீர்வு காண ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக எடுத்துக்கொள்கின்றன. திரிபுரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண 18 ஆண்டுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. மத்திய தகவல் கமிஷனால் திருப்பி அனுப்பப்பட்ட மேல்முறையீடு மனுக்களில் 95 சதவீதம் மீண்டும் தாக்கல் செய்யப்படுவதில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *