BRIDGE 2026 – 5ஆம் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு அக்டோபர் 11,12 ஆகிய நாள்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தருகின்ற பெரியாரியல் பேராளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உரையாற்றுகின்றனர். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி., சிறப்புரையாற்றுகின்றார். மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றவர்களை நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துக் கூறி வழியனுப்பினர். (சென்னை, 9.10.2026)
ஜப்பானில் நடைபெறும் BRIDGE 2026 – 5ஆம் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாட்டிற்குப் பேராளர்கள் பயணம் கழகத் துணைத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் பயனாடை அணிவித்து வழியனுப்பி வைத்தனர்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
