முத்துப்பேட்டையில் பெரியார் கேட்கும் கேள்விகள் புத்தகம் பரப்புரை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

முத்துப்பேட்டை, அக். 10- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்க ளின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் மன்னார்குடி கழக மாவட்டம்  முத்துப் பேட்டை ஒன்றியத்தில் பெரியார் கேட்கும் கேள்விகள் என்ற நூலினை 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இளைஞரணி சார்பில் சிறப்புடன் பரப்புரை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி, கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி குமார் ஆகியோர் முன்னிலையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணி விக்கப்பட் டது. மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற புத்தக விற்பனையில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், நகர இளைஞரணி ஆ.சந்தோஷ் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட கடைகளில் 73 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. முத்துப் பேட்டை பகுதியில் மாணவர்களும், பகுத்தறி வாளர்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி படித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமா நாத் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *