கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் – மதுரை உயர் நீதிமன்றம் அதிருப்தி

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, அக். 9- நீதிமன்றம் மீது பயம் இல்லாத அதிகாரிகள், கோயில் சொத்துகளில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விட்டனர் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பாதுகாக்கக் கோரி திருத்தொண்டர் சபை அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், ‘‘கோயில் சொத்துகளில் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் நபர்களுக்கு எப்படி வாடகை செலுத்தாமல் இருக்க மனம் வருகிறது. அதிகாரிகளும் தற்போது கோயில் சொத்துகளில் முறைகேடு செய்யத் தொடங்கிவிட்டனர்.

அவர்களே ஒருவரை வாடகைக்கு அமர்த்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முன்பெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும், தற்போது அந்த பயம் அவர்களுக்கு இல்லை.

ஏற்கெனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மாநிலம் முழுவதும் கோயில் சொத்துகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தர விட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *