மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 08- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண் டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வித் துறை  இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கே (தொடக்கக் கல்வி) உள்ளது.

அதன்படி நடப்பாண்டு கடந்த ஆக.1-ஆம் தேதி நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணி நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அளிக்கப்படும் விவரங்கள் தவறானவை என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும்.

மேலும், எண்ணிக்கை குறித்த அறிக்கையை இயக்குநரகத்தில் அக்.21 முதல் 28-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *