கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர்கள், அதிகாரிகள் 889 பேருக்கு சிறை தண்டனை!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 8– தமிழ் நாட்டில், லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த, 10 ஆண்டுகளில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 889 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை ரகசியமாக கண்காணித்தும், புகார்களின் அடிப்படையிலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திடீர் சோதனைகள் நடத்தி கணக்கில் வராத லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் மட்டும், ரூ.2.15 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில், 1.87 கோடி ரூபாயை, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ‘கூகுள் பே’ வாயிலாக பெற்றுள்ளனர். லஞ்ச வழக்குகளில், நீதிமன்றங்களில் தகுந்த ஆவணங்கள் மற்றும் சாட்சிகளுடன், காவல் துறையினர் குற்றத்தை நிரூபித்து, குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை பெற்று தருகின்றனர்.

நடப்பு ஆண்டில் இதுவரை, 73 பேருக்கும், கடந்த, 10 ஆண்டுகளில், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 889 பேருக்கம் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கூறுகையில், ‘அதிகபட்சமாக, 2024 -2025 ஆண்டில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என, 126 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, 2020 – 2021இல் 41 பேர், 2021 – 2022இல், 51 பேருக்கு மட்டுமே சிறை தண்டனை பெற்றுத்தர முடிந்தது’ என்று கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *