பக்திக்கு கிடைத்த பலனோ? திருச்செந்தூரில் கடல் சீற்றத்தால் நீராடிய 5 பக்தர்களின் கால் முறிவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தூத்துக்குடி, அக். 03- திருச்செந்தூரில் அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தின, பிந்தின சில நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. மேலும் கடல் அலைகளும் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூரில் நேற்று (2.10.2026) அதிகாலையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. சுமார் 10 அடி உயரம் வரையிலும் ராட்சத அலைகள் எழும்பி கரையை தாக்கின.
அப்போது கடலில் ‘புனித’ நீராடிய சில பக்தர்கள் நிலை தடுமாறி விழுந்தனர். அங்கு கடலின் அடியில் பாறைகளாக இருந்ததால், அதில் மோதியதில் 5 பக்தர்களின் கால் எலும்பு முறிந்தது.
இதில் படுகாயமடைந்து தத்தளித்த திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த குணசேகரன் (45 வயது), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சரோஜா (42 வயது), திருச்சியைச் சேர்ந்த இலஞ்சியம் (55 வயது), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகுமாரி (52 வயது), கிருஷ்ணவேணி (75 வயது) ஆகிய 5 பேரை காவல்துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.
படுகாயமடைந்த 5 பக்தர்களை யும் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *