வருகையில்லா பத்திரப்பதிவுத் திட்டம் தொடங்கப்பட்ட ஒன்றரை மாதத்தில் ஒரு லட்சத்தை கடந்தது

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 02- தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ முறையை ஆக.17-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

மனைப்பிரிவில் முதல் விற்பனை, அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் விற்பனை ஆகிய 2 ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்பட்டது. ஆக.17 முதல் செப்.30-ஆம் தேதிவரை 44 நாட்களிலேயே 1,00,134 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 5 லட்சம் பொதுமக்களின் கால விரையம், தேவையற்ற செலவு குறைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து படிப்படியாக பிற ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னையில் சிறப்பு முகாம்கள்!

சென்னை, அக். 02- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-இல் தெரிவித்த கடிதத்தின் வாயிலாக, சிறப்புத் தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறையாகத் தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள ”உறுதிமொழிப் படிவம்” (Declaration Form), சிறப்புத் தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தம் அல்லாத காலக்கட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-இன்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவின் படிவம் 6-இல் மாற்றம்

புதுடில்லி, அக்.02- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் இணையத்தின் படிவம் 6-இல் சேர்க்கப்பட்டிருந்த கூடுதல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) உறுதிமொழிப் பிரிவை தேர்தல்ஆணையம் நீக்கியுள்ளது.

எஸ்அய்ஆர் பணிகள் நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் உடனே அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், அ்ங்கு் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப் பிப்பவர்கள், 1960-ஆம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ‘படிவம் 6’-அய் மட்டும் இனி சமர்ப்பித்தால் போதுமானது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *