சென்னையில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 01-  சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: யுஜிசி நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. நெட் தேர்வுக்கு சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 3-ஆம் முதல் நடத்தப்பட உள்ளன.

இரண்டாம் தாளுக்கான பயிற்சி வகுப்பு (தமிழ் முதன்மை பாடம்) வாரம்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு (General Paper on Teaching and Research Aptitude) வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடைபெறும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் 90808 65906 என்ற எண்ணில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *