தந்தை பெரியார் பிறந்த நாள் கொள்கை விளக்கக் கூட்டம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஓசூர், செப். 28- தந்தை பெரியார் 148 ஆவது பிறந்தநாள் கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். திராவிடர் கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வம் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டுகளையும் அதன் சிறப்புகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இரா.செயசந்திரன்,ச.எழிலன், மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேரறிவு, செயலாளர் மதிவாணன்,மேனாள்  சட்டக்கல்லூரிகள் திராவிட மாணவர் கழகத் துணை அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி, திமுக பொறியாளர் அணி மாநில துணை அமைப்பாளர் ஞானசேகரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம்,35 வார்டு திமுக வட்ட செயலாளர் வடிவேல்,அதிமுக ஜீவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *