இரா.ஜெயக்குமார்
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
- ரயில் நிலையத்தில் வரவேற்பு
- தி.மு.க. சார்பில் வரவேற்பு
- ரோட்டரி சார்பில் வரவேற்பு
- பங்கேற்ற மருத்துவர்கள் – பேராசிரியர்கள் – தொழிலதிபர்கள்
- பங்கேற்ற விளையாட்டு (கிளப்) நண்பர்கள்
- ஒலி முழக்கம் மற்றும் பாடல்
- தொடக்க விழா ஏற்பாட்டாளர்கள்
- மிக பிரம்மாண்டமாக பெரியார் நடை எப்படிச் சாத்தியம்?
- தமிழர் தலைவரின் வீர நடை – வேக நடை
- கருஞ்சட்டை கடலான தஞ்சை மாநகரம்
- பங்கேற்ற முக்கிய கழகப் பொறுப்பாளர்கள்
- தமிழர் தலைவர் பாராட்டு



செப். 19 கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட, மாநகர திராவிடர் கழகம் தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் சமூகநீதி, சமத்துவத்திற்கான பெரியார் நடை (பெரியார் வாக்கத்தான்) 19.9.2026 அன்று காலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மன்னர் சரபோஜி கல்லூரிச் சாலை, காமாட்சி மருத்துவமனை, பழைய வீட்டு வசதி வாரியம், குழந்தை யேசு கோயில், புதுக்கோட்டை சாலை, ஆர்.ஆர். நகர் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையம் விழா மேடையை வந்தடைந்தது. 5 கி.மீ. தூரம் நடைபயணம் நடைபெற்றது.
ரயில் நிலையத்தில் வரவேற்பு
19.9.2026 அதிகாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தலைமைக் காப்பாளர் மு.அய்யனார் தலைமையில் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்வெல்வன், மாநகரச் செயலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.இராமலிங்கம், பள்ளி அக்கிரகார பகுதிச் செயலாளர் பேராசிரியர் க.ஜோதிபாசு, மாநகர துணைச் செயலாளர் இல.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், துணைச் செயலாளர் விஸ்வநாதன், வியன்ஜோதிபாசு ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். ரயில் நிலையம் வளாகத்திலேயே வேனில் நடைப்பயிற்சி உடையை மாற்றிக் கொண்ட தமிழர் தலைவர் அவர்கள் நேராக பெரியார் நடை தொடங்கும் இடத்திற்கு காலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். காலை 6.30 மணிக்கு தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் மாநில வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் மாலை அணிவித்தார்.
காலை 6.30 மணிக்கு புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட மேடையில் தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாநகரத் தலைவர் செ.தமிழ்செல்வன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தி.மு.க. சார்பில் வரவேற்பு
தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.செல்வம், தஞ்சை மாநகர திமுக செயலாளர் சண்.இராமநதன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் திமுக மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, ரூபாவதி பூபதி, 51ஆவது வார்டு திமுக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு அணிச் செயலாளர் முனைவர் செல்வ.கலைமணி, 51ஆம் வார்டு திமுக நிர்வாகிகள் உதயக், பார்த்திபன், செழியன், நாதன் ஆகியோர் ஆசிரியர் அவர்களை வரவேற்று பயனாடை அணிவித்து உடன் நடந்து வந்தனர்.
ரோட்டரி சார்பில் வரவேற்பு
மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, ரோட்டரி முன்னாள் தலைவர் கோவி.மோகன், கொண்டல் சாம்ராஜ், மகிழினிபாரி, மாவட்ட ஆளுநர் தேர்வுத் தலைவர் ஆடிட்டர் டி.என்.ஜெயக்குமார், உதவி ஆளுநர்கள் கணேஷ்குமார், கலைச்செல்வன், மேனாள் தலைவர் ரகு, மேனாள் தலைவர் ப.சக்திவேல், ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்க தலைவர் இர.பிரபு, செயலாளர் பேராசிரியர் க.ஜோதிபாசு, உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று பயனாடை அணிவித்து உடன் நடந்து வந்தனர். ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்க மேனாள் தலைவர் க.ரகு பெரியார் உலகத்திற்கு ரூ.15,000 ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
பெரியார் நடையில் பங்கேற்றவர்களுக்கு டி-சர்ட் வழங்கியும், சான்றிதழ் அச்சடித்தும் வழங்கிய தஞ்சை ஹாரிஸ் பிளக்ஸ் உரிமையாளர் ஏ.எஸ்.ஆர்.அங்குராஜாவுக்கும், பெரியார் நடையில் பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு வழங்கிய தஞ்சை தீபம் பிளக்ஸ் உரிமையாளர் எம்.ஆனந்துக்கும், டி-சர்ட் வழங்கி சிறப்பித்த தஞ்சை ரெஸ்டாரண்ட் உரிமையாளர் ப.ரமேஷ், தண்ணீர் பாட்டில் வழங்கி சிறப்பித்த ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர் இர.பிரபு, உதவி புரிந்த காங்கிரஸ் கட்சி அகில இந்திய பொறுப்பாளர் சொர்னா சூரியமூர்த்தி, தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கச் செயலாளர் பேராசிரியர் க.ஜோதிபாசு, மேனாள் தலைவர் ப.சக்திவேல், மாவட்ட ஆளுநர் தேர்வு ஆடிட்டர் டி.என்.ஜெயக்குமார், உதவி ஆளுநர்கள் கணேஷ்குமார், கலைச்செல்வன், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, ஆகியோருக்கும் பெருந்தகையாளர்களை சந்தித்து பங்களிப்பு உதவிகளை பெற்று நிகழ்வை ஒருங்கிணைத்த தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். விழா சிறக்க உழைப்பை நல்கிய மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமாருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பங்கேற்ற மருத்துவர்கள் – பேராசிரியர்கள் – தொழிலதிபர்கள்
பெரியார் நடைப் பயணம் மேற்கொண்டு வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சை 50ஆம் வார்டு திமுக சார்பில் மாவட்ட திமுக பொருளாளர் எல்.ஜி.அண்ணா, 50ஆம் வார்டு திமுக செயலாளர் மா.ஞானச்செல்வன், மெடிக்கல் பகுதி திமுக பொறுப்பாளர் வாசிம்ராஜ், 50ஆம் வார்டு மாமன்ற உறுப்பினர் க.மரகதம் மெடிக்கல் பகுதி திமுக பொருளாளர் க.மனோகரன், திமுக பொறுப்பாளர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ம.தவமணி, திமுக மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், திமுக பேச்சாளர் ஆம்பல் நேதாஜி, கீழவாசல் பகுதி திமுக செயலாளர் ஆர்.கே.நீலகண்டன், ராஜமாணிக்கம், பூபதி ந.சக்திவேல், தொண்டரணி அமைப்பாளர் சிவராஜ் 42ஆம் வார்டு லோகநாதன், 50ஆம் வார்டு எம்.முத்தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.
தஞ்சை ஆர்.ஆர். நகரில் இ.கே.டெக்ஸ் உரிமையாளர்கள் கை.முகிலன், செல்வமணி, கை.மு.அறிவுச்செல்வன், பேன்சி ஸ்டோர் உரிமையாளர் நா.வெங்கடேசன், ந.கலைச்செல்வி உள்ளிட்டோர் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.
மருத்துவர்கள்: டாக்டர் அரவிந்த், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் அஞ்சுகம் பூபதி, டாக்டர் வினோத், டாக்டர் மோகன்ராஜா, மகப்பேறு மருத்தவர் சுப்ரஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெரியார் நடையில் பங்கேற்றனர்.
பேராசிரியர்கள்: பேராசிரியர் நம்.சீனிவாசன், கரந்தை கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ந.எழிலரசன், பேரா.ஜெயராஜ், பேரா.சந்திரசேகர், சரபோஜி கல்லூரி பேராசிரியர்கள் பேரா.வீ.பாரி, பேரா.சசிக்குமார், பேரா.சிவக்குமார் ஆசிரியர் சாரங்கராசன் பேரலை யூட்டீப் சேனல் இந்திரக்குமார் தேரடி, மிட்டவுன் ரோட்டரி சங்க நிர்வாக சுரேஷ், பேராசிரியர் இளவரசி பொய்யாமொழி, பேராசிரியர் விடுதலைவேந்தன், பேரா.இளங்கோ உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள் பெரியார் நடையில் ஆசிரியருடன் பங்கேற்றனர்.


பங்கேற்ற விளையாட்டு (கிளப்) நண்பர்கள்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஏஒய்ஏ விளையாட்டு வளாகம் சார்பில் பொறியாளர்கள் கோ.ரவிச்சந்திரன், ராஜசேகர், அன்னை சத்தியா விளையாட்டு திடல் நடைப்பயிற்சி சங்க கவுரவத் தலைவர் து.செல்வம், கலைமணி, கிட்டு கிரவுண்டு நடைப் பயிற்சி சங்கத்தினர், தஞ்சை தண்டர் விளையாட்டுக் கழக நிறுவனர் தே.பொய்யாமொழி, இர.மணிகண்டன் மற்றும மாணவர்கள், கூடைப்பந்து பயிற்றுநர் சீனி.தென்னரசு மற்றும் மாணவர்கள், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம் இண்டர்நேசனல் கூடைப்பந்து பயிற்றுநர் பாஸ்கரன் மற்றும் மாணவர்கள், தஞ்சை அம்பிகா தமிழ்ச்செல்வனின் எக்சலெண்ட் எஜிகேசன் மாணவர்கள், தென்னக பண்பாட்டு மய்ய இயக்குநர் (ஓய்வு) குணசேகரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் இரமேஷ் மற்றும் மாணவர்கள், தஞ்சையின் பல்வேறு பகுதி நடைபயிற்சி சங்கத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஒலி முழக்கம் மற்றும் பாடல்
பெரியார் நடை குறித்த இளந்தலைமுறையினருக்கு ஏற்றார்போல் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் ஆக்கத்தில் திரைப்பட இயக்குநர் மணிவாசகம் இசையில் உருவான பாடல் ஒளிபரப்பட்டது. மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல் மற்றும் ச.சித்தார்த்தன் ஆகயோர் ஒலிப்பெருக்கி மூலமாக ஒளி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.பிரகாஷ் பாரதி தேவா விடுதலை ஒளிப்படக் கலைஞர் ப.சிவக்குமார் ஆகியோர் வீடியோ, போட்டோ எடுத்து உதவினர்.
தொடக்க விழா ஏற்பாட்டாளர்கள்
தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏவிஎன் குணசேகரன், துணைச் செயலாளர் விஸ்வநாதன், இபி காலனி பகுதிச் செயலாளர் இரா.பரந்தாமன், தமிழ்ப் பயண தொடர்பக பணியாளர் அபினேஷ் ஆகியோர் மிகவும் நேர்த்தியாக தொடக்க விழா நிகழ்வை செய்திருந்தனர். இவர்களுடன் இணைந்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்தார்.
மிக பிரம்மாண்டமாக
பெரியார் நடை எப்படிச் சாத்தியம்?
பெரியார் நடை எப்படிச் சாத்தியம்?
செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் நடை சிறப்பாக நடத்திட மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் தலைமையில் 15 நபர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தஞ்சை ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பெருந்தகையாளர்களை சந்தித்துப் பங்கேற்பாளர்களுக்கு டி-சர்ட், அனைவர்க்கும் காலை உணவு, தண்ணீர் பாட்டில் அனைவருக்கும் சான்றிதழ், துண்டறிக்கை மற்றும் பிளக்ஸ் பேனர், போஸ்டர், ஒலி பெருக்கி விளம்பர அமைப்பு தொடக்க விழா மேடை அமைப்பு, கழகக் கொடி கட்டுதல் உள்ளிட்ட அனைத்தையும் நன்கொடையாக விழாக் குழுவினர் பெற்றனர்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விளையாட்டுத் திடலில் அன்னை சத்தியா விளையாட்டுத் திடல், கிட்டு மைதானம், ஏஒய்ஏ விளையட்டு மைதானம், ஆர்.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகள் நடைபயிற்சியாளர்கள், பேஸ்கட் பால், வாலிபால், கால்பந்து, கராத்தே, சிலம்பம், பேட்மிட்டன் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் நகரில் உள்ள முக்கிய பெருமக்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், வணிகர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து பெரியார் நடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்த விழாக்குழுவினரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.


தமிழர் தலைவரின் வீர நடை – வேக நடை
பெரியார் நடை தொடங்கியவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடைப்பயிற்சி உடையுடன் மேற்கொண்ட வீரநடை வேக நடையை கண்ட இருபுறமும் நின்ற பொதுமக்களும் உடன் பயணித்தவர்களும் 93 வயதில் இவ்வளவு வேகமான நடையா என ஆச்சரியத்துடன் ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்து வியப்பில் ஆழ்ந்தனர்
கருஞ்சட்டை கடலான தஞ்சை மாநகரம்
சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் முதியவர்கள் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பெரியார் படம் பதித்த கருப்பு டி-சர்ட் அணிந்து ஆசிரியருடன் பங்கேற்ற அனைவரும் வீறு நடை போட்டது, தஞ்சையில் கருங்கடல் புகுந்ததை போல் புது எழுச்சியையும், உற்சாகத்தையும் கண்ட ஆசிரியர் முகமும் மகிழ்ச்சியில் திளைத்தது. பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை உணவு வழங்கிய தீபம் பிளக்ஸ் உரிமையாளர் அங்குராஜா மற்றும் தீபம் பிளக்ஸ் பணியாளர்கள் மற்றும் அன்பு மெஸ் உரிமையாளர் த.குமார் ஆகியோர் உணவு பரிமாறினர்.
தமிழர் தலைவருடன் பெரியார் நடையில் பங்கேற்ற சுமார் 1000 பேர். அனைவரும் ஒருவரை ஒருவர் தள்ளாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காவல்துறைக்கு எந்த வேலையும் வைக்காமல் மிகவும் மிடுக்காக நேர்த்தியாக நடந்து சென்றதை பார்த்த காவல்துறையினரும், ஊடகச் செய்தியாளர்களும் வியந்து பாராட்டினர். தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம் பெரியார் மறைவுக்கு பிறகு இருக்காது என ஏளனம் பேசியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பெரியார் மறைந்து 53 ஆண்டுகள் கடந்தும் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காலத்திலும் அதே இராணுவக் கட்டுப்பாடுடன் செயல்படு வதை தஞ்சை பெரியார் நடை உலகுக்கு உணர்த்தியது.
பங்கேற்ற முக்கிய கழகப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டக் கழகத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், பெரியார் வீரவிளையாட்டு கழக மாநிலச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை.கவுதமன், மாவட்ட கழக துணைச் செயலாளர் கருவிழிக்காடு சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோயில் வெ.நாராயணசாமி, மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் மலர்க்கொடி, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் அ.வெண்ணிலவு, திருவையாறு ஒன்றியத் தலைவர் சா.கண்ணன், நகரத் தலைவர் அ.கவுதமன், திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.இராமலிங்கம், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் கி.ஜவஹர், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் இரா.பாலு, மாவட்ட ப.க. துணைத் தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், நெடுவை மு.அய்யாத்துரை, கழக ஒன்றிய துணைச் செயலாளர் பா.விஜயக்குமார், இபி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் பாராட்டு
தஞ்சையில் மிகவும் நேர்த்தியாகவும், நெகிழ்ச்சியாகவும் பலத்தரப்பட்ட மக்களையும் பங்கேற்கச் செய்து பெரியார் பிறந்த நாள் விழாவினை பொது விழாவாக, நன்றிப் பெருக்கு விழாவாக பெரியார் நடையை நடத்திய விழாக் குழுவினரை ஆசிரியர் அய்யா அவர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோருக்கு தொலைபேசியில் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தார். தோழர்களின் அணுகுமுறையும், மக்கள் தொடர்பும், கூட்டு முயற்சியும், உழைப்பும் இருந்தால் எவ்வளவு பெரிய நிகழ்வையும் மிக எளிதாக செய்திட முடியும் என்பது தஞ்சை பெரியார் நடை நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முகமலர்ச்சியுடன் தஞ்சைத் தோழர்களை பெரிதும் பாராட்டி மகிழ்வித்தார்.
