கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் “பூவும் புல்லும்” சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அக்டோபர் 6இல் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக இரு அணிகளுக்கும் புதிய பெயர், சின்னம் ஒதுக்கியதை தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்திய நெய்யில் பாமாயில் மற்றும் பல்வேறு ரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. MG-90, MONOGLYCERIDES, MYVACET SOFT 400, ACETIC ACID ESTER உள்ளிட்ட ரசாயனங்கள் கண்டறியப்பட்டதாக கூறி, லட்டு தயாரிப்பாளர் கைது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நாட்டின் சுமார் 250 மாவட்டங்களில் 15–29 வயதுடைய இளைஞர்களில் 25%-க்கும் மேற்பட்டோர் கல்வி, வேலை அல்லது தொழிற்பயிற்சியில் ஈடுபடவில்லை என 2025 மாவட்ட அளவிலான PLFS ஆய்வு தெரிவித்துள்ளது.குறிப்பாக பீகார், உத்திரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்நிலை அதிகமாக உள்ளதாக ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *