கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் காந்தி உரை
கேம்பிரிட்ஜ்,மார்ச் 4- என்னுடைய பார்வையில், நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டி ருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குவார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விடயங்கள் எனக்கு பெரியதாகத் தெரியப் போவதில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை யடுத்து, லண்டன் சென்ற ராகுல் காந்தி பல்கலையில், ‘21-ஆம் நூற் றாண்டில் கேட்பதற்காக கற்றுக் கொள்வது’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை யின் யூடியூப் காட்சிப் பதிவு லிங்கை காங்கிரஸ் பிரமுகரும், மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகருமான சாம் பிரிட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந் துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற் றுவதற்கான வாய்ப்பை அளித்த தற்காக கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எனது உரையைத் தொடங் குவதற்கு முன்பாக இந்தியாவை பற்றி கொஞ்சம் சொல்ல விரும்பு கிறேன். இந்திய ஜனநாயகம் தற் போது பெரும் அழுத்தத்திற்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். நான் இந்தியாவின் ஒரு எதிர்கட்சித் தலைவர்.
ஒரு ஜனநாயக நிறுவன கட் டமைப்பிற்கு தேவையான அடிப் படைகளான நாடாளுமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், நீதித் துறை, ஒன்றிணைவதற்கான எண் ணங்கள் அனைத்தும் கட்டுப்படுத் தப்படுகின்றன. இதனால் நாங்கள் இந்திய ஜனநாயகத்தின் அடிப் படை கட்டமைப்பின் மீதான தாக் குதல்களை எதிர் கொண்டு வருகிறோம்.
இந்திய அரசமைப்பு, இந்தி யாவை மாநிலங்களின் கூட்ட மைப்பு என்று சொல்கிறது. அந்த கூட்டமைப்புக்கு இடையே பேச்சு வார்த்தையும் உரையாடல்களும் தேவையாக இருக்கின்றன. ஆனால், அது தற்போது தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
நீங்கள் பார்க்கும் இந்த படம், இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுக்கப்பட்டது. எதிர் கட்சித் தலைவர்கள் அங்கு நின்று கொண்டு சில பிரச்சினைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதுபோல மூன்று நான்கு தடவைகள் நடந் திருக்கின்றது. ஒப்பீட்டளவில் இது வும் ஒரு வன்முறையே. அதேபோல, ஊடகங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப் படுவது குறித்தும் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நீங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும்.
எனது அலைபேசியிலும் பெகா ஸஸ் இருந்தது. பெரும்பாலான அரசியல்வாதிகள் அவர்களின் அலைபேசிகளில் பெகாஸஸ் வைத்திருந்தனர். ஒரு உளவுப்பிரிவு அதிகாரி என்னை அழைத்து, “தயவுசெய்து அலைபேசியில் பேசும்போது கவனமாக இருங்கள். நாங்கள் உங்கள் உரையாடல்களை பதிவு செய்கிறோம்” என்றார். இது தான் நாங்கள் தொடர்ந்து அனுப வித்து வரும் அழுத்தம். எந்த வகை யிலும் குற்றவியல் வழக்குகளாக ஆக முடியாத விடயங்களுக்காக என்மீது சில குற்றவியல் வழக்குகள் போடப் பட்டுள்ளன. இவைகளைத் தான் நாங்கள் எதிர்கொண்டு வருகி றோம்” என்றார்.
பாஜக அரசாங்கம் பற்றி சில நல்ல விடயங்களை குறிப்பிடும்படி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “உங் களுக்கு ஒரு சிலவற்றின் அடிப் படைகள் மீது நம்பிக்கை இல்லாத போது… அதாவது, பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கியது என்று நான் நினைக்கி றேன். வங்கிக்கணக்கு தொடங்கியது தவறான விஷயம் இல்லை. ஆனால் என்னுடைய பார்வையில், நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குவார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விடயங்கள் எனக்கு பெரியதாகத் தெரியப்போவதில்லை. அவர் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்” என்று கூறினார்.
மேலும் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தைப் பற்றிக்கூறும் போது, என்னை ஒரு சகோதரனாக நம்பி, என்னுடன் கரம் கோர்த்து பயணித்தவர்களுடன் நடந்த உரை யாடல்கள் ஒரு அரசியல்வாதியாக என்னுடைய பார்வையை மாற்றி யுள்ளன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.