சென்னை, மார்ச் 4 சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர் வாகக் குழுவின் முதல் கூட்டம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (3.3.2023) நடந்தது.
இதில் முதலமைச்சர் பேசியதாவது: காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத் தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு விரை வாக செயல்படுத்தி வருகிறது. தமிழ் நாட்டிற்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே முன்மாதிரியாக செயல்படுகிறோம். அண்ணா பல் கலைக் கழகத்தில் ‘காலநிலை ஸ்டுடியோ’ அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கென தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்கள் நடும் திட்டம் செயல்படுத் தப்படும். தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீ காரம் பெற்ற சதுப்பு நிலங்கள் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தி யுள்ளோம். இத்திட்டங்களை ஒருங் கிணைக்க நாட்டிலேயே முதல்முறை யாக ‘தமிழ்நாடுபசுமை காலநிலை நிறுவனம்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தொடங் கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, என் தலைமையில் ‘காலநிலை மாற்ற நிர்வாக குழு’ அமைக் கப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது நீடித்துநிலைப்பதாக இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். ‘ஒருங்கிணைந்த நலன்’ என்ற கொள் கையை உறுதியாக எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மய்யம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களை கையாள்வதுபோல, வெப்ப அலைகள், புதிய நோய்களை கையாளவும் நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை சில மாதங்களில் அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதை இக்குழு ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடைய நிர்ணயிக்கப்பட் டுள்ள இலக்கான 2070-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டிற்கு இலக்கை நிர்ணயிக்கும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மை யுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. பள்ளி,கல்லூரி மாணவர்கள், தொழில் முனைவோர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
இதில் அமைச்சர்கள், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெய ரஞ்சன், சுற்றுச்சூழல் துறைசெயலர் சுப்ரியா சாஹு, ஒன்றிய திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, உலக சுகாதார நிறு வன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், அய்.நா. சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹைம், நிலை யான கடலோர மேலாண்மை தேசிய மய்ய நிறுவன இயக்குநர் ரமேஷ் ராமச் சந்திரன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப் பின் சுந்தரராஜன், ராம்கோ சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.