சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 11- புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய் துள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 15-ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவ ரான பாரதி கூறியதாவது:-

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய் துள்ள இடமே காலம். காலமாக மீனவர்களுக்கானதுதான். இது கடல்சார் நிலம். அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் அனை வருக்கும் இது தெரியும். எங்களது பூர்வீக இடத்தில் மீனவர்களுக்கான குடியிருப்புகள் தான் கட்டித் தர வேண்டும்.

எங்கள் இடத்தை திருப்பித் தர வேண்டும். மாற்றாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வைக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் கட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?.

பொதுவாக கோட்டையில் சுதந்திர நாளில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போதே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல விட மாட்டார்கள். இப்போது புதிய தலைமைச்செயலகம் வேறு கட்டி விட்டால், நாங்கள் வீட்டை விட்டு கூட வர முடியாது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து எங்களை சுதந்திரமாக நடமாட கூட விட மாட்டார்கள். மீன்பிடிக்கவும் செல்ல முடியாது.

12 மீனவ கிராமங்கள் எதிர்ப்பு

ஏற்ெகனவே சாந்தோம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் இருந்தே எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருப்பு வேண்டும் என்று சொல்லி வருகிறோம். தற்போது அமைச்சராக இருக்கும் வெங்கடரமணன் கூட, தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தார். எங்களுக்கு சொந்தமான இடத்தை பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார். இப்போது அது குறித்து பேச மறுக்கிறார்.

புதிய தலைமைச்செயலக திட்டத் தால் நேரடியாக பாதிக்கப்படுவது முள்ளிகுப்பம், முள்ளிமாந கர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம். இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும். முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக்குடும் பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்னவும் பயன்படுத்தும் கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும். அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எங்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15-ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறோம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *