அம்பத்தூர், மார்ச். 4- பெரியார் 1000 வினா- விடை தேர்வில்வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள சர்.இராமசாமி (முதலியார்) மேனி லைப் பள்ளியில் நடைபெற்து.
பெரியார் 1000 வினா-விடை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாண வியர்களுக்கு பரிசு வழங்கும் விழா 3.3.2023 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் உமா ஒருங்கி ணைப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் அம்பத்தூர் பகுதி திரா விடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம் தந்தை பெரியார் படத்தை வழங்கியும், மாவட்ட செயலாளர் க.இளவரசன் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்க ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி இன்றைய காலகட்டத்தில் பெரியாரின் தேவை பற்றி உரை யாற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், அய்.சரவணன், ச.இரணியன், க.தமிழ்ச்செல்வன் ஆகி யோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு பதக்கம், சான்றிதழ், பரிசு புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.