மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, பெரியார் தொண்டர் குழு, மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக சா ஆலம் மற்றும் ஈப்போ மாநகரங்களில் 17/9/2026 & 20/09/2026 ஆகிய நாட்களில் ஈ ப்போ ரிஷி பவன் உணவகம் மற்றும் சா ஆலம் – பிரிவு 17அரசு பொது மண்டபத்தில் நடை பெறவிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியின் போது பெரியார் பிறந்த நாள் விழா வாழ்க்கை குறிப்பு நூல் வெளியீடு மற்றும் திராவிடர் கழக நூல்கள் விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் மூத்த பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்யப்படும். மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக இந்த நிகழ்வுகள் நடைபெறும் என முனைவர் மு கோவிந்தசாமி தெரிவித்துக் கொள்கிறார்.
– – – – –
தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நன்னிலம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நன்னிலம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டக் காப்பாளர் வடுகக்குடி கோவிந்தராஜ் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கரிகாலன், ஒன்றியச் செயலாளர் ஆசிரியர் ஆறுமுகம், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, அன்று காலை 10.00 மணிக்கு நன்னிலம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்குவது, மாலை தந்தை படிப்பகத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் நடத்துவது, கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்ற செயல் திட்டங்கள் வகுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நன்னிலம் நகரச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
