திருப்பதி: ‘2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி’ லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருமலை, செப்.7 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் சாதாரண ஊழியராகச் சேர்ந்து தற்போது இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம். ஆன்மிக மக்களை அதிர்ச்சி அடையச் செய்த திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரத்தில் விசாரணை நடத்திய சி.பி.அய்., ஒன்றிய, மாநில அரசுகளுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், ”கலப்பட நெய் வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி சில தேவஸ்தான அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது” என்று தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அவ்வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அனில்குமார் சிங்கால் ஏற்கெனவே அப்பதவியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கோயிலின் இணை நிர்வாக அதிகாரியான லோகநாதத்தின் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (5.9.2026) அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட சோத னையில், ரூ 5 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்கள், 2 கிலோ தங்க ஆபரணங்கள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் லோகநாதம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. திருப்பதி தேவஸ்தா னத்தில் சாதாரண ஊழியராகப் பணிக்குச் சேர்ந்து, கடந்த ஆட்சியில் விரைந்து துணை நிர்வாக அதிகாரியாக உயர் பதவிக்குச் சென்றுள்ளார்.

அது மட்டுமின்றி அவருடைய ஊதி யத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை தொடர்ந்து விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தற்போது சோதனை நடத்தி லோகநாதத்தைக் கைது செய்துள்ளனர். இன்னும் சில அதிகாரிகள் கைதாவார்கள் என்று சொல்லப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *