சென்னை, செப் 06- தமிழ்நாடு அண்மைக் காலமாக பொருளாதார ரீதியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகி யுள்ள ஆய்வு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் பெங்களூருவைவிட சென்னை மக்கள் தான் அதிகம் கடன் வாங்குவதாக தெரிய வந்திருக்கிறது.
பிஆர்அய்சிஇ-டாடா நடத்திய ஆய்வில்தான் இது தெரிய வந்திருக்கிறது. ஆய்வில் நாட்டின் முக்கிய பெருநகரங்களான மும்பை, டில்லி, பெங்களூரு, அய்தராபாத் ஆகியவை ஒப்பிடப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வில், பிற பெருநகரங் களை விட சென்னை மக்கள் தங் களின் வருமான வரம்பை தாண்டி சொத்துக்கள் வாங்குவதற்காக மிக அதிக அளவில் கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள மொத்த குடும்பங்களில் 27.7 சதவீத குடும்பங்கள் பெரும் கடன் சுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சொந்த வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங் குவதற்காகவே பெரும்பகுதி கடன் பயன்படுத்தப்படுகிறது.
மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது.. சென்னையில் வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந் திருக்கின்றன. எனவே இங்குள்ள மக்கள் சொத்துகளை வாங்க அதிக கடன் வாங்குகிறார்கள்.
வீடு மற்றும் வாகன கடன் விகிதத்தில் சென்னை 27.7 சதவீதமாக இருக்கிறது. அய்தராபாத், பெங்களூருவை எடுத்துக் கொண்டால்.. அவர்கள் நிறைய சம்பாதித்தாலும் 14-15 சதவீதம் தான் கடன் வாங்கு கிறார்கள். அவர்களிடம் ஏற்கெனவே நிறைய சொத்துகள் இருப்பதால் கடன் வாங்குவது குறைவாக இருக்கலாம்.
மறுபுறம் நாட்டிலேயே பெங்களூரு நகர மக்கள்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் அதிக அளவில் சேமித்தும் வைக்கிறார்கள். சத்தீஷ்கர் மக்கள் அதிகமாக செலவிடுகிறார்கள் என்றும், டில்லி மிகப்பெரிய சந்தைக்கான நகரமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. டில்லி மக்கள் தாங்கள் சம்பாதிப்பதை விட குறைவாகவே செலவு செய்கிறார்கள். மறுபுறம் மும்பைதான் அதிகம் பணம் புழங்கும் நகரமாக இருக்கிறது. இங்குதான் அதிக அளவில் பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அண்மைக் காலமாக பொருளாதார ரீதியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் பெங்களூருவைவிட சென்னை மக்கள்தான் அதிகம் கடன் வாங்குவதாக தெரிய வந்திருக்கிறது.
