100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் த.வெ.க. சாதனை : திமுக முன்னாள் அமைச்சர்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, செப்.6 தவெக ஆட்சியில் 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதாகவும், திமுகவைவிட பல மடங்கு கடன் வாங்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி பேசியதாவது, “தவெகவினர் ரீல்ஸ் மூல மாகவே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் எந்தச் சாதனையையும் சொல்லி, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.

இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப் படவில்லை.

நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள் தான் இந்த ஆட்சி.

ஒரு திட்டத்தை அறிவிப்பர்; ஆனால், எந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள். ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டப்பேரவை அலுவலகம் என்றார்கள். அப்படியெனில், ஒரு சதுர அடிக்கு ரூ. 6,000 வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து சொல்ல மாட்டார்கள்.

நாங்கள் செம்மஞ்சேரியில் விளை யாட்டு நகரத்தை உருவாக்கினோம். அதற்கான அடிப்படைச் செலவுகளைச் செய்துவிட்டோம். ஆனால், அதனை ரத்து செய்து விட்டார்கள்.

மீண்டும் அவர்கள் ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எந்த இடத்தில் என்பதைச் சொல்லவில்லை.

இந்தியாவிலேயே ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்தியது எங்கள் ஆட்சிதான். ரூ. 18 கோடி செலவில் நாங்கள் கார் பந்தயம் நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இன்று ரூ. 300 கோடி ரூ. 500 கோடி செலவில் கார் பந்தயத்துக்காக விளையாட்டு நகரம் உருவாக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார்.

ஆனால், அந்த இடத்தில் தொழிற் சாலையே இல்லை. இல்லாத தொழிற் சாலையை மூட வேண்டும் என்றும், பாதுகாப்போம் என்றும் சொல்கின்றனர்.

அவர்கள் ரீல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது ரியல் ஆட்சி கிடையாது” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *