சென்னை, செப்.6 திமுக கூட்டணியை முறித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கே அவமானம் ஏற்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தனது அண்மைக்கால பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் திமுகவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு தற்போது ஏமாந்துவிட்டோமா என்ற உணர்வு மேலோங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கணக்கு தவறாகப் போய்விட்டதால் அவமானப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், அகில இந்திய அளவிலான கூட்டணி யில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறு வோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ்குமார் பேசிய கருத்து முற்றிலும் சரியானது என்றும், அதைத் தான் முழுமையாக வழிமொழிவதாகவும் செல்வப்பெருந்தகை உறுதியளித்துள்ளார்.
