ஆற்றுப்படுகையில் மரம் நடும் விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

முத்துதேவன்பட்டி, செப்.6- தேனி முத்துதேவன்பட்டி கிராமத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் மரம் நடும் விழாவில் ஆற்றுப்படுகையில் மரம் நடும் விழா இரண்டாம் கட்டமாக 6.9.2026 அன்று காலை 7.00 மணி அளவில் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன்  தலை மையில் நடைபெற்றது.

அபு பக்கர் சித்திக் எஸ்டிபிஅய் கட்சி மாவட்ட தலைவர், சகாயராஜ்  முன்னாள் கவுன்சிலர், பாண்டியன்  தனியார் விவசாயத்துறை, ரஜினி அய்யனார் முன் னிலை வகித்தனர்.

மரக்கன்று பராமரிப்பு குழு அமலன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் உமர் எஸ்டிபிஅய் கட்சி நகர தலைவர் கதிரேசன், அழகுராஜ், கதிரேசன், திராவிடர் கழக மாணவர் கழகத் தலைவர், ஹரி பிரசன்னா, திராவிடர் கழக மாணவர்கள் ஜான்சன், ரித்தின், பாரத் பிரியன், வினித் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் தாமாக முன்வந்து மரக்கன்றுகள் வழங்கி மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆற்றில் தினமும் குளிப்போர் அனைவரும் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தென்னை மா பலா பலா அத்தி பூவரசம் உட்பட 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்று வழங்கிய நன் கொடையாளர் களுக்கும் மரம் நடும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திராவிட கழக மாணவர் அணி செயலாளர்சஞ்சித் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *