முத்துதேவன்பட்டி, செப்.6- தேனி முத்துதேவன்பட்டி கிராமத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் மரம் நடும் விழாவில் ஆற்றுப்படுகையில் மரம் நடும் விழா இரண்டாம் கட்டமாக 6.9.2026 அன்று காலை 7.00 மணி அளவில் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் தலை மையில் நடைபெற்றது.
அபு பக்கர் சித்திக் எஸ்டிபிஅய் கட்சி மாவட்ட தலைவர், சகாயராஜ் முன்னாள் கவுன்சிலர், பாண்டியன் தனியார் விவசாயத்துறை, ரஜினி அய்யனார் முன் னிலை வகித்தனர்.
மரக்கன்று பராமரிப்பு குழு அமலன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் உமர் எஸ்டிபிஅய் கட்சி நகர தலைவர் கதிரேசன், அழகுராஜ், கதிரேசன், திராவிடர் கழக மாணவர் கழகத் தலைவர், ஹரி பிரசன்னா, திராவிடர் கழக மாணவர்கள் ஜான்சன், ரித்தின், பாரத் பிரியன், வினித் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் தாமாக முன்வந்து மரக்கன்றுகள் வழங்கி மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆற்றில் தினமும் குளிப்போர் அனைவரும் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தென்னை மா பலா பலா அத்தி பூவரசம் உட்பட 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்று வழங்கிய நன் கொடையாளர் களுக்கும் மரம் நடும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திராவிட கழக மாணவர் அணி செயலாளர்சஞ்சித் நன்றி கூறினார்.
