திருப்பதி ஏழுமலையானுக்கே நாமமா? தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை கணக்கில் வராத நகை, பணம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருமலை, செப். 3 திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சொத்து பத்திரங்கள், நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் கோயில் இணை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோக நாதன். இவர் திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பணியாற்றி வருகிறார். உயர் பதவியில் இருக்கும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இவரின் திருப்பதி தொட்டாபுரம் வீடு, திருமலையில் இவருக்கென ஒதுக்கப்பட்ட பி-53 குடியிருப்பு, இவரது மைத்துனர்கள் இருவரின் வீடு, செல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீடு என மொத்தம் 5 இடங்களில் நேற்று (2.9.2026) சோதனை நடைபெற்றது. திருப்பதி லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சிறீனிவாச ராவ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
மேலும், திருப்பதி எஸ்.டி.வி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இவரது லாக்கரிலும் சோதனை செய்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளின் பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வீட்டு மனைப் பட்டாக்கள், வெள்ளிப் பாத்திரங்கள், ரொக்கம் என வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்துள்ளது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, கணக்கில் வராத அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எனினும் அவற்றின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரம் உடனடியாக தெரி விக்கப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *