சென்னை, மார்ச் 6- தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வரும் நிலையில், தொற்று அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்திலிருந்து 3,500 வரை மேற்கொள் ளப்படும் பரிசோதனைகளை அடுத்து வரும் நாள்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள கரோனா பாதிப்பு ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகள்தான் என்றும், அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழ்நாட்டில் புதிதாக கரோனா பாதிப்புக் குள்ளானோரின் எண்ணிக்கை 28-ஆக ஞாயிற்றுக்கிழமை உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னை, செங்கல் பட்டில் தலா 4 பேருக்கும், கோவை, கிருஷ்ணகிரி, சேலத் தில் தலா 3 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர அய்க்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பஹ்ரைனிலிருந்து தமிழ்நாடு வந்த மூவருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 146 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 16 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர்.