பால் கொள்முதல் விலை ரூ. 44 ஆக உயர்வு சட்டப்பேரவையில் அறிவிப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 1- தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, இனி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (31.8.2026) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதைக் கருத்தில்கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.41 ஆக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கறவை மாடுகளுக்கான தீவனம் மற்றும் இதர இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

அதை பரிசீலனை செய்து, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் விதமாக கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44 ஆக வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வால் மாதம் ரூ.60 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.720 கோடி செலவாகும். இந்த செலவினத்தை ஆவின் நிறுவனத்துக்கு அரசு ஈடுசெய்யும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *