செங்குன்றம், ஆக. 28- பெரியார் பெருந் தொண்டர் பாலு – லட்சுமி ஆகியோரின் மகன் செல்வகுமார் (வயது 34) படத்திறப்பு நிகழ்ச்சி 26/8/2026 புதன் மாலை 7 மணிக்கு செங்குன்றம் தர்காஸ் கிராமத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமை தாங்கினார்.
பெ.சரவணன் (திமுக) படத்தை திறந்து வைத்தார். தாய்த்தமிழ் இயக்கத்தின் நிறுவனர் க.பா சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சோழ வரம் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன், விளாங் காடு பக்கம் தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஓவி யர் ந.ஜனாதிபதி, ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், டில்லி ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினர். எந்தவித மூட சடங்குகளின்று உடல டக்கம் செய்யப்பட்டது.
சாந்தி, கும்மிடிப் பூண்டி மாவட்ட செய லாளர் பாஸ்கர், புழல் நகரத் தலைவர் இரா.சோமு, புழல் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், புழல் ஒன்றியத் தலைவர் ஜெகத் விஜயகுமார், தாய்த்தமிழ் இயக்கத்தின் தலைவர் அருள் நாராய ணன், தர்காஸ் நாகராஜ், மல்லிகா நகர் சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
