“ஆளுநர் அதிகாரத்தால் ஏற்படும் சங்கடங்களுக்கான தீர்வு மாநிலத் தகுதிதான்” புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி, ஆக. 28- “ஆளுநரின் அதிகாரத்தால் மக்களால் தேர்வான அரசு, முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்கான தீர்வு மாநிலத் தகுதிதான்,” என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குறிபிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (27.8.2026) பேசிய அவர் கூறியதாவது: “புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளோம். கடந்த காலத்தில் மாநிலத் தகுதி பெறுவதில் மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால் தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், மக்கள் அறிந்துள்ளனர்.

மாநிலத் தகுதி கேட்டு பிரதமர் மோடி தொடங்கி, முன்பு இருந்த பல பிரதமர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அப்போதெல்லாம் அவர்கள் ‘பார்ப் போம்’ எனக் கூறுவார்கள். அதனால் மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சில சமயம் அழுத்தம் தந்து பெற வேண்டும், இதற்காக நேரு சட்டமன்ற உறுப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவா நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

அதேபோல், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கேயுள்ள நாடாளு மன்ற உறுப்பினர்களை சந்தித்து ஒட்டுமொத்தமாக புதுச்சேரியின் மாநிலத் தகுதிக்காக குரல் கொடுக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து மாநிலத் தகுதியை நாடாளு மன்றத்தில் வலியுறுத்துவது அவசியம்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு நிதி, திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் ஒரு குறை உள்ளது. புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்க வேண்டும் எனக் கோரினேன். மாநிலத் தகுதியை கிடைக்கும் என்ற நம்பிக்கை யுள்ளது.

மாநிலத்தில் ஆளுநருக்குதான் அதிகாரம் என்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை சென்று உறுதிப்படுத்தினர். அதனால் தான் துணை நிலை ஆளுநரிடம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல மைச்சர், அமைச்சர்களுக்கு பல சங் கடங்கள் உள்ளன. துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதால் சில முடிவுகளில் நமக்கு சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு மாநிலத் தகுதி பெறுவதுதான்.

கரசூரில் சிறப்பு பொருளாதார மண் டலம் அமையும், கரசூர் தொழிற்பேட்டை வர தாமதத்துக்கு காரணம், ஆளுநர் கோப்பை தேவையில்லாமல் ஒன்றிய அரசுக்கு அனுப்பியதுதான்.

பல நேரங்களில் பணிகள் திட்டங்கள் நிறைவேறாததற்கு தேவையில்லாமல் ஒன்றிய அரசுக்கு கோப்புகளை அனுப் புவதும் ஓர் காரணம். இங்குள்ள சண் டையில் அங்கு அனுப்பினர். அரசின் பல திட்ட கோப்புகள் ஒன்றிய அரசின் அனுமதிக்கு தேவையில்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, கோப்புகள் தேங்கி, திட்டங்கள் நிலுவையில் கிடக்கின்றன. இதில் மாற்றம் தேவை. தற்போது கோப்புகளை நாம் ஒன்றிய அரசுக்கு அனுப்புவதே இல்லை. இங்கேயே தேவையான முடிவுகளை எடுத்து தீர்வு காண்கிறோம்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *