கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும் அகில இந்திய மாணவர் சங்கமும் இணைந்து செப்.5இல் டில்லியில் பேரணி

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 28- டில்லியில், நடை பெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) அமைதிப்பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் ஆதரவு தெரி வித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசி வுக்கு எதிராக டில்லியில் சிஜேபி நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களின் விளை வாக, ஒன்றிய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25ஆம் தேதி பதவி விலகினார்.

ரூ. 1 கோடி இழப்பீடு

இதையடுத்து, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப் பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் கைவிடப் பட்டன.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு

ஆனால், போராட்டத் தைக் கைவிடுவதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு தவறியதவுள்ளதாக சிஜேபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனை எதிர்த்து வரும் செப். 5 ஆம் தேதி ஆசிரியர் நாளை முன்னிட்டு டில்லியின் இந்தியா கேட் பகுதியில் இருந்து அமைதிப் பேரணி நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் களின் குடும்பத்தினர் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் 26.8.2026 அன்று ஆதரவு அளித்துள்ளது.

இதுபற்றி, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா கூறியதாவது: “அனைத்து வழக்குகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் மீதான பெல்லட் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அரசு தயா ராக இருக்க வேண்டும்.

அதிகாரக் குவிப்பு

ஒன்றிய அரசின் என்டிஏ மற்றும் நீட் தேர்வுகள் போன்ற அதிகாரக் குவிப்புக்கு எதிராக எழும் போராட் டங்களோ அல்லது மாநில மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி அளவிலான போராட்டங்களோ; எதுவாக இருந்தாலும் உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்கள் ஆதரவு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

மாணவர் போராட்டம்

முன்னதாக, டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம், ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் அகில இந்திய மாணவர் சங்கம் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *