சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் வெள்ளத்தில் சிக்கிய அவலம்! குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனத்தில் விசாரணை

இணையவழி கையெழுத்து இயக்கம்

தாம்பரம், ஆக. 28-  நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற் றும் நிலச்சரிவில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் பயணம் சென்ற 49 தமிழ்நாடு பக்தர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி புறப்பட்ட இந்த குழுவில் செங்கல்பட்டு மாவட் டத்தைச் சேர்ந்த 7 பேர், காஞ்சிபு ரத்தைச் சேர்ந்த 6 பேர், சென்னையைச் சேர்ந்த 6 பேர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 49 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் 22 ஆண்களும், 27 பெண்களும் அடங்குவர்.

கைலாஷ் பயணத்தை முடித்து விட்டு நேபாளம்– –- சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவல கத்தில் நடைமுறைகளை மேற்கொண்டி ருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள் ளத்தில் குடியேற்ற அலுவலக கட்டடம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு பக்தர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

குழுவின் பயண வழிகாட்டியும், டிரா வல்ஸ் நிறுவன உரிமையாளரின் மகனுமான சத்ய நாராயணனும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். கடைசி யாக கடந்த
26-ஆம் தேதி காலை 8.42 மணி யளவில் அவர் தொலை பேசியில் பேசியதாக கூறப் படுகிறது. அதன் பின்னர் சத்ய நாராயணன் உள்பட 49 பேரிடம் இருந்தும் தகவல் இல்லை.

இதற்கிடையே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் லதா பானுமதி (63), அருட்செல்வம் (64), கோபால், சரஸ்வதி மற்றும் சந்திரன் குப்புசாமி (52), மீனாட்சி நந்தகுமார் (34) ஆகிய 6 பேரும் இந்த குழுவில் சென்றுள்ளனர். இவர்களது நிலை குறித்தும் தகவல் இல்லாததால் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்தனர்.

கோபால்-சரஸ்வதி இணை யரின் மகள் பொற்செல்வி, குரோம் பேட்டையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று பெற் றோரின் நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து சிட்லபாக்கம் காவல் துறையினரும், தாம்பரம் வட்டாட் சியரும் நிறுவனத்துக்கு சென்று பக்தர் களின் முழு விவரங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த குழுவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார். இவர்கள் குறித்து நேபாளம், சீனா மற்றும் இந்திய தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காததால் இவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *