சென்னை, மார்ச் 7 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பாக வயது முதிர்ந்த தமிழ் அறி ஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த திட் டத்தின் கீழ் 2022-_2023ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியு டையவர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப் பங்களை www.tamilvalarchithurai.in என்ற தளத்தில் பதவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்பத்தை அனுப்பும் முறையையும் அந்த தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.