நீதிக்கட்சி 15ஆவது மாநில மாநாடு திருவாரூரில் நடைபெற்ற நாள் (24, 25.08.1940)

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

1940-கள், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நீதிக்கட்சி தனது செல்வாக்கை இழந்து, தேக்க நிலையில் இருந்தபோது, தந்தை பெரியாரின் தலைமை, அந்தக் கட்சியை ஒரு புதிய பாதையில் இட்டுச் சென்றது. இந்த காலகட்டம், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது முதல், நீதிக்கட்சி ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது வரை பல முக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக அமைந்தது.

 நீதிக்கட்சியின் திருப்புமுனை மாநாடு

1940 ஆகஸ்ட் 24 அன்று திருவாரூரில் நடை பெற்ற நீதிக்கட்சியின் 15-ஆவது மாநாடு, கட்சியின் எதிர் காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது. இந்த மாநாட்டில், தந்தை பெரியார் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முழக்கம், “திராவிட நாடு திராவிடருக்கே” என்பதாகும். இது வெறும் கோரிக்கை அல்ல, திராவிடர்களின் கலை, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தை பிரிட்டிஷ் இந்தியாவுக்கான அமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்க வேண்டும்’’ என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுக்கவும், பெரியார் தலைமையில் முனி கன்னையா (நாயுடு), கி.ஆ.பெ. விசுவநாதம், டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன், பி.டி. ராஜன், ராஜா சர். முத்தையா (செட்டியார்) உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. இந்தத் தீர்மானத்தை பி. பாலசுப்பிரமணியம் முன்மொழிய, அறிஞர் அண்ணா மற்றும் சி. பாசுதேவ் ஆகியோர் வழிமொழிந்தனர்.

ஏற்கெனவே நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பெருமைகளை உணர வழி வகுத்திருந்தது. போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் உயிர்த் தியாகங்கள், திராவிட இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பெரும்  ஆதரவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பின்னணியில், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக, 1941 ஜூலை 1 ஆம் தேதி திராவிட நாடு பிரிவினை நாள் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அறிஞர் அண்ணாவின் உணர்ச்சிப்பூர்வமான உரைகள், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில், திராவிட நாடு கொள்கைக்கான ஆதரவை மேலும் அதிகரித்தன.

சாமான்யர்களின் கட்சி

நீதிக்கட்சி என்றால் பெரிய சீமான்கள் மற்றும் மிராசுதாரர்களின் கட்சி என்றிருந்த பொதுவான தோற்றத்தை   பெரியாரின் தலைமை மாற்றியது. சாமான்ய மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, அவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டார்.  இந்தச் செயல்பாடுகள், முயற்சிகள், நீதிக்கட்சி ஒழிந்துவிட்டது என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், பழமை விரும்பிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தின. மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நீதிக்கட்சிக்கு ஆதரவு பெருகியது. தந்தை பெரியார் தலைமை  நீதிக்கட்சியை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *