சென்னை, ஆக. 25- கருநாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கவலையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வின் போது பேசிய அவர், ”கருநாடக மாநிலத்தில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு (Post-mortem) அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மற்றும் புதிய விவரங்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து தமிழ்நாடு அரசு தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், உயிரிழந்த தமிழர்களின் குடும்பங் களுக்குத் தகுந்த நிவாரணம் மற்றும் நீதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்நிகழ்வு குறித்து நியாயமான மற்றும் நடுநிலையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வு குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மற்றும் சட்டப்பூர்வ விசாரணைகள் தொடர் பாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கருநாடக எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
