கடந்த பிப்ரவரி 14 அன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை முதல் இராமேசுவரம் வரை செல்லும் ரயில்களை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மண்டல திராவிடர் கழகத்தின் தலைவர் கா.மா.சிகாமணி கோரிக்கையினை அனுப் பியிருந்தார்.
அதன்படி 7.03.2023 முதல் ரயில் மதுரை யிலிருந்து இராமநாதபுரத்துக்கு காலை 6.50 மணிக்கும், பிற்பகல் 12.30 மணிக்கும், மாலை 6.10 மணிக்கும் விடப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் மாவட்ட மக்களும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வரும் பயணி களும் பெரும் பயன் அடைந்துள்ளனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையை உடனடியாக செயல் படுத்திய மதுரை மண்டல பொது மேலாளர் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப் பட்டது.