தந்தை பெரியார் பங்கேற்ற வடாற்காடு மாவட்ட குறள் மாநாடு வேலூரில் நடைபெற்ற நாள் இன்று (24-08-1958)

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வடாற்காடு மாவட்ட குறள் மாநாடு மற்றும் சுதந்திரத் தமிழ் நாடு மாநாடு 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று வேலூரில் பாரக்ஸ் திடலில் நடைபெற்றது. மாநாட்டு பந்தலிற்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்று பெயர் சூட்டியிருந்தனர்.

குறள் மாநாட்டிற்கு தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை தாங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறள் மாநாட்டினை திறந்து வைத்தார்.

சி.பா.ஆதித்தனார் தலைமையில் நடைபெற்ற சுதந்திரத் தமிழ் நாடு மாநாட்டினை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மாநாட்டில் திருக்குறளார் முனுசாமி, கு.மு.அண்ணல் தங்கோ, ‘புலித்தேவன்’ சகாதேவன், பாவலர் பாலசுந்தரம், ஏ.பி.சனார்த்தனம், கா.ப. அழகநம்பி, இமயவரம்பன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் பங்கேற்று மாநாட்டினை சிறப்பித்தனர். முன்னதாக வில்லுப்பாட்டு கலைஞர் ந.ஆ.சு.மணி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *