பழைய துணிகளை இனி தூக்கி வீசாதீர்கள்! மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோவை, ஆக.24 வீடுகளில் பழைய துணிகளை என்ன செய்வது என்ற கவலை இனி இல்லை. இவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ள மாநகராட்சி, துணிகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் பயன் படுத்தாத, பழைய துணிகள் இடத்தை அடைத்துக்கொள்கின்றன. அதிக விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு, தூக்கி வீச மனம் வராது. ஆனால் அணியவும் மாட்டார்கள்.

சிலர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பர். வீடுதோறும் வந்து சேகரிக்கும் பெண்களிடம் கொடுப்பார்கள். பலர் குப்பையுடன் கலந்து வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

குப்பையை நான்கு ஆகப் பிரிக்கும் தற்போதைய திட்டம் அமலான பிறகு, குப்பையுடன் கலந்து வரும் துணிகளை என்ன செய்வதென்பது புதிய பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில்தான் தனியார் நிறுவனம் முன்வைத்த மறுசுழற்சி திட்டத்தை இறுக பிடித்துக்கொண்டது மாநக ராட்சி. துணியை மறுசுழற்சி செய்யும் இத்திட்டத்தை, ஆர்.எஸ்.புரம் மாநக ராட்சி கட்டுப்பாட்டு மய்யத்தில் ஆணையர் ரவி தேஜா நேற்று முன்தினம் (22.8.2026) துவங்கி வைத்தார்.

‘இத்திட்டத்துக்கு ‘மறு நெசவு’ என பெயர் வைத்துள்ளோம். கவுண்டம்பாளையத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. மக்கள், வீடுகளில் பயன்படுத்தாத பழைய துணி உள்ளிட்ட ஜவுளி பொருட்களை வழக்கமான திடக்கழிவுகளுடன் சேர்க்காமல், தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம். சேகரிக்கப்படும் ஜவுளி, கழிவு மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். ஜவுளி கழிவு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையில் செல்வதை குறைப் பதுடன், ஜவுளி பொருட்களை மறுசுழற்சி செய்ய உதவும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *