நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நெல்லை, ஆக.24- நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொல்லியல் மாணவர்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நெல்லை அருகே மருதூர் அணைக் கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

உழக்குடி அருகே உள்ள நெடுங்கல்லைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதன் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையையும் உயரத்தையும் கண்டு வியந்தனர்.

பானை ஓடுகள்

அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது.

வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை. அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும்.

அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *