சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

விஞ்ஞானிகள் ஒரு பைசா-அளவிலான மருத்துவ நானோ சிப்களை உருவாக்கியுள்ளனர். கொடூரமான காயங்களுக்கு சிகிச்சை அளித்து சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் பெறும் திறனைக் கொண்டுள்ளது.

புரட்சிகர புதிய தொழில்நுட்பம், காயங்களைக் குணமாக்கி அந்த உறுப்புகளை மீண்டும் உருவாக்க முயல்கிறது. இந்தத் தொழில்நுட்பம் திசு நானோ மாற்றியமைத்தல் (tissue nano transfection) டிஎன்டி என அழைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நானோ சிப்பை அழுத்துவதன் மூலம் வினாடிகளில் வேலை செய்கிறது. தமணிகள் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய உதவுகின்ற இயற்கை உயிரணு கட்டுமானக் கருவிகள் அவற்றை மாற்றுவதற்கு ஒரு சிறிய மின்சார தூண்டுதலால் தோல் செல்கள் டிஎன்ஏ வேலை செய்கிறது.

சேதமடைந்த குருதி நாளங்களுக்கு நானோ சிப்  மூலம் முழு செயல்பாட்டை மீட்டமைக்கலாம் என ஆரம்பகட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டது.

இந்தச் சோதனை பன்றிகள் மற்றும் எலிகளுக்கு 98 சதவிகிதம் வெற்றியை அளித்துள்ளது. கடுமையாக காயமுற்ற எலியின் கால் குருதி ஓட்டம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குள் நானோ சிப் மூலம் செல்கள் மீண்டும் உருவாகின.

ஓஹியே மாநிலப் பல்கலைக்கழகம், இயற்கை நானோ டெக்னாலஜி மருத்துவர் சந்தன் சென், கூறும் போது இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சரும உயிரணுக்களை எந்த உறுப்பின் செல்கலாகவும் மாற்றலாம். இந்த செயல்முறை இரண்டு வினாடியை விட குறைவாக எடுக்கும். ஆனால் இது ஊடுறுவல் இல்லை. இந்த சிப் உங்களுடன் தங்காது செல் மறு உருவாக்கம் தொடங்குகிறது.

எங்கள் நானோ சிப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காயமடைந்த அல்லது சிதைந்த உறுப்புகளை மாற்றலாம். “தோல் தோற்றமளிக்கும் எந்த உறுப்பின் உறுப்புகளையும் நாம் வளரக்கூடிய ஒரு வளமான நிலமாகும் என்று நாங்கள் காட்டியுள்ளோம்” என கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *