அறிமுகம் இல்லாதவர்களா? தனிப்பட்ட ஒளிப்படங்களைப் பகிர வேண்டாம்! கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை அறிவுறுத்தல்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 20– அறிமுக மில்லாத நபர்களிடம் தனிப்பட்ட ஒளிப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று முன்தினம் (18.8.2026) இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தற்போது பரவி வரும் பல்வேறு மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

குறிப்பாக, இணைய வழி வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, போலி முதலீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மாணவிகள் சமூக வலைதளங்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட ஒளிப் படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்துக்கிடமான லிங்க்-குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இணையவழி குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, “இணையவழி குற்றங்களுக்கு எதிராக விழிப் புடன் செயல்படுவோம், இது குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்று சுமார் 2,500 மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரி முதல்வர் கலைவாணி, இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையர் விஸ்வநாத் ஜெயன், உதவி ஆணையர்கள் மனோஜ்குமார், ராகவி மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *