பவுத்தர்கள் நாக்பூர் பயணம் மேற்கொள்ள நிதியுதவி விண்ணப்பம் அளிக்கலாம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 20- நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறவுள்ள தம்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்கச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுத்தர்களுக்கு, தலா அதிகபட்சமாக ரூ. 5,000 மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாக்பூரில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பும் பவுத்தர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மானியத் தொகை: நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5,000. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம். (கட்டணமின்றிப் பெறலாம்). அதிகாரப் பூர்வ இணையதளம்: www.bcmbcmw.tn.gov.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங் களை உரிய ஆவணங்களுடன் கடைசி நாளான 15.11.2026-க்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *